ரயில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தாம்பரம் சென்ற மின்சார ரயில் திடீரென நிறுத்தப் பட்டது. சென்னையி லிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலின் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அந்த ரயில் பல்லாவரத்தில் பாதி வழியிலேயே நிறுத்தப் பட்டது. இதனால் அந்த மார்க்கத்தில் சுமார் 20 நிமிடமாக ரயில்கள் இயக்கப்பட வில்லை. பின்னர் மாற்று டிரைவரின் மூலம் ரயில் இயக்கப் பட்டது.
திரிசூலம் அருகே ரயில் வந்த போது அடையாளம் தெரியாதவர் கல்வீசிய அதிர்ச்சியால் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப் படுகிறது.