நாடு முழுவதும் நெடுஞ்சாலை களில் உள்ள அனைத்து மதுக்கடை களையும் மூட உச்சநீதி மன்றம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஓர மதுக் கடைகளால் வாகன விபத்துகள் அதிகம் ஏற்படு கின்றன; ஆகையால் அவற்றை மூட உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர் கே. பாலு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரசூட் தலைமை யிலான பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், மாநில
மற்றும் தேசிய நெஞ்சாலை களில் உள்ள அனைத்து மதுக்கடை களையும் மூட அதிரடியாக உத்தர விட்டது. தற்போதைய மதுக்கடைகளை 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தலாம் என்றும்
அதன் பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை களை திறக்க மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது எனவும் உச்சநீதி மன்றம் இன்று உத்தர விட்டுள்ளது.