இந்திய ராணுவத்தினர், கடந்த ஆண்டு பாகிஸ்தான் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய சம்பவம் தொடர்பாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது விளக்க மளித்துள்ளார்.
மணிப்பூர் தேர்தலுக்கான பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை தலைநகர் இம்பாலில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.
பின்னர் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், பாகிஸ்தான் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய தகவல்க ளையும் வெளி யிட்டார்.
கடந்தாண்டு செப்டம்பரில் ஜம்மு-காஷ்மீரின் யூரி பகுதியில் இருந்த ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து
பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தபட்டதை ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் தான், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவது என முடிவெடுக்க பட்டதாக குறிப்பிட்டார்.
யூரி தாக்குதல் நடைபெற்ற 11 நாட்களுக்குள் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப் பட்டதாகவும், தீவிரவாதத்தை எதிர் கொள்வதில் பிரதமர் மோடி தலைமை யிலான அரசு உறுதியான நிலைப் பாட்டில் இருப் பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.