நடத்தையில் சந்தேகம்.. மனைவியை ஓட ஓட வெட்டிகொலை !

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தனது மனைவியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை ஓட ஓட வெட்டிகொலை !
திருவண்ணா மலை மாவட்டம் ஆரணிக்கு அருகே உள்ள களம்பூர்– இலுப்பை குணம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் கென்னடி கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி என்பவ ருக்கும் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹனிஷ் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன், மனைவி இருவருக் குமிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது ஆத்திரமடைந்த ஜஸ்டின் தனது மனைவியை கத்தியால் வெட்டினார். அவரிடமிருந்து தப்பித்து வெளியே ஓடிய சுமதியை ஜஸ்டின் ஓட, ஓட விரட்டி வெட்டினார். 
இதில் சுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை யடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜஸ்டின் கென்னடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings