தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்பார் என்பதற்காக கடந்த 5ம் தேதி இரவு முதல் விடிய, விடிய பொதுப்பணித் துறையினா் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கை அமைக்கும் வேலையை செய்து வந்தனா்.
7ம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்பார் என்று கூறப்பட்டது. இதனை யொட்டி சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில், சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இதற்காக, மேடை அமைப்பு, ஒலி, ஒளி வசதிகளை, பொதுப்பணித் துறையினர் செய்தனர். மாவட்ட ங்களில் இருந்தும், 100க்கும் மேற்பட்ட பொறியா ளர்கள், சென்னை வர வழைக்கப் பட்டிருந்தனர்.
வேலைகளும் படுஜோராக நடந்து வந்தது. இந்த நிலையில் யார் பதவி ஏற்கப் போகிறார்கள், என்றைக்கு என்று தெரியாமல் தவித்து வருகின்றனா்.
பல்கலை வளாகத்திற்கு, போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டிருந்தது. சசிகலாவுக்கு எழுந்த எதிர்ப்பால், அவரை பதவியேற்க, கவர்னர் அழைக்க வில்லை. அதனால், பதவியேற்பு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அங்கு போடப் பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப் பட்டது. ஆனாலும், பதவி யேற்புக்காக செய்திருந்த ஏற்பாடுகளை அகற்றும்படி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உத்தர விடவில்லை.
அதனால், அந்த மண்டப த்தையும், செய்திருந்த ஏற்பாடுக ளையும் கவனித்து வரும் பொதுப் பணித்துறை ஊழியா்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தும், சசியை திட்டியும் வருகின்றனா்.