சென்னை திருவேற்காட்டில் தன் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், இளம்பெண் ஒருவர் செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவேற்காடு தம்புசாமி நகரைச் சேர்ந்தவர் பிரியா. தனியார் நிறுவன த்தில் பணியாற்றி வரும் இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்,
அந்த இளைஞர் கடந்த மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பூவிருந்த வல்லி மகளிர் காவல் நிலையத்தில் பிரியா புகார் அளிக்க சென்று ள்ளார்.
ஆனால் காவல் துறையினர் பிரியாவின் புகாரை வாங்க மறுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத் துள்ளனர். இந்நிலையில், திடீரென பிரியா, வீட்டின் அருகே உள்ள செல்ஃபோன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதை யடுத்து தகவல் அறிந்த காவல் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி அப்பெண்ணை கீழே இறக்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.