பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத் துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் இன்று சரணடை ந்தார்.
அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தர விட்டார்.
மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரது அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுதாகரனும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராய ணனிடம் சரணடை ந்தார். அவரும் உரிய சோதனை களுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்ப ட்டார்.
After two days, Sasikala's lawyers should move a petition in SC seeking shifting her to a jail in TN for security reasons— Subramanian Swamy (@Swamy39) February 15, 2017
இந்நிலையில் சசிகலா இன்று சிறைக்குப் போக முக்கியக் காரண மாக இருந்த சுப்பிர மணியன் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட் டுள்ளார்.
அதில், பாதுகாப்பு காரணங்க ளுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் இதற்கான நடவடிக் கையை முதல் வரானதும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Sasikala should be shifted to a a jail in Tamil Nadu after Palanisamy becomes CM in the interest of security— Subramanian Swamy (@Swamy39) February 15, 2017
மேலும், இது தொடர்பாக சசிகலாவின் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டை 2 நாட்களில் அணுக வேண்டும் என்றும் அந்த டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டிவிட்டில் தன்னுடையே பெயரின் தமிழ் மொழி பெயர்ப்பு பழனிச்சாமி என்றும் பதிவிட் டுள்ளார். சாமி ஆரம்பத்தில் சசிகாலவு க்குக் கொடி பிடித்தார்.
Palanisamy is Tamil translation of Subramanian Swamy— Subramanian Swamy (@Swamy39) February 15, 2017
அவர் ஜெயிலிக்குப் போய் விட்ட நிலையில் சசி தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேச ஆரம்பித் துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.