இன்று கூவத்தூரில் தங்குகிறார் சசிகலா !

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏகளுடன் இன்று கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. 

இன்று கூவத்தூரில் தங்குகிறார் சசிகலா !
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை மிரட்டி தான் சசிகலா ராஜினாமா செய்ய வைத்தனர் என்று கூறி தமிழக அரசியலையே அதிர வைத்தார். 

ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த மெரினா புரட்சிக்கு பிறகு அதிமுக பன்னீர் செல்வம் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிளவுப் பட்டது.

இதனை யடுத்து பன்னீர் செல்வம், சசிகலா இருவரும் தனித் தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள். இதனிடையே பன்னீர் செல்வம் அணிக்கு சசிகலா அணியில் இருந்த ஏழு எம்.எல்.ஏகள் தாவினார்கள். 

இந்த நிலையில் கட்சியிலும் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ -கள், 127 பேரை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இதனை யடுத்து நேற்று, நேற்று முன் தினமும் கூவத் தூருக்கு சென்ற சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏகளை ஆலோசனை நடத்தினார். 
இந்த நிலையில் இன்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று பிற்பகல் கூவத்தூர் சென்றுள்ளார்.

தனது ஆதரவு எம்.எல்.ஏ-களுடன் ஆலோசனை நடத்தும் சசிகலா, இன்று அந்த தனியார் விடுதியிலேயே தங்க முடிவு செய்துள் ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. 

இந்த நிலையில் சசிகலா மீது உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதன் காரணமாக அவர் அடுத்த கட்ட நடவடிக்கை கள் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.
ஒரு வேளை குற்றவாளியாக அறிவிக்கப் பட்டால் என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தவும் அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் அவர் இன்று கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க முடிவெடுத்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings