ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு பிரிவினரும், முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்
இன்னொரு பிரிவினரும் செயல்படு கிறார்கள். இரு தரப்பினரும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கடும் பலப் பரீட்சையில் ஈடுபட்டனர்.
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூரில் இருக்கும் சொகுசு விடுதியில் கடந்த 9 நாட்களாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இன்று கவர்னர் எடப்பாடி பழனிச் சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததும். கூவத்தூரில் தங்கி இருந்த எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.
இதை தொடர்ந்து கொண்டா ட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்று கொள்கிறார். தொடர்ந்து அமைச் சர்களும் பதவி ஏற்று கொள்கின்றனர்.
இதை தொடர்ந்து 9 நாட்களாக கூவத்தூர் விடுதியில் இருந்த எம்..எல்.ஏக்கள் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை திரும்புகி றார்கள்.