இலவசத்தால் நாம் இழந்தது என்ன?

இந்த முறை தேர்தல் தேதி அறிவி த்தவுடனே எனக்கு வந்த முதல் பயம் என்னென்ன வெல்லாம் இலவசத்தை அறிவிக்கப் போகிறார் களோ என்பது தான்.
இலவசத்தால் நாம் இழந்தது என்ன?
எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதே எண்ணம் தோன்றி இருக்கும். கலைஞர் இலவச தொலைக் காட்சியில் ஆரம்பித்து வைத்தது தொடர்ந்து அபாயகர மாகச் சென்று கொண்டு இருக்கிறது.
தெரு நாய்களை அரவணைக்கும் மதுரை பெண் - வீதி வீதியாக சென்று உணவு !
ஒரு மாநிலத்தையே சீரழிக்கும் வகையில் திமுக அதிமுக கட்சிகள் நடந்து கொண்டு வருகின்றன.

இலவசத்தை முதலில் ஆரம்பித்தது அதிமுக ஆனால், தேர்தலுக் காக இல்லாமல் இடையில் மாணவர் களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப் பட்டது.

இச்சமயத்தில் அதிமுக ஆட்சி சிறப்பு இல்லை யென்றாலும் மோசமில்லை.

அடுத்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் வாய்ப்பே இருந்த நிலையில் திமுக இலவச தொலைக் காட்சியை அறிவித்துக் கூட்டணி கட்சிகள் மூலம் வெற்றிப் பெற்றது.

இதைத் தான் ஜெயா தொலைக் காட்சியும் அதிமுகவும் ஐந்து ஆண்டுகளும் மைனாரிட்டி திமுக அரசு என்றே கூறி வந்தது.

அடுத்தத் தேர்தலில் கடந்த முறை போல நடந்து விடக் கூடாது என்று ஏகப்பட்ட இலவ சங்களை அள்ளிக் கொடுத்தது

அதோடு அப்போது இருந்த மக்கள் எதிர்ப்பு காரணமாகவும் திமுக தோல்வி அடைந்தது.

E-Waste என்ற மின்னணு கழிவு

இலவசத்தை அறிவித்த அதிமுக அதை நிறைவேற்ற பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்தது.
கோதுமை ரவை வடை செய்வது
இதனால் எந்த வித வளர்ச்சி திட்டங்களும் செய்யப் படாமல் கடன் மேல் கடன் என்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதை அனைத்தையும் விட இலவச பொருட்கள் தரமற்ற பொருட்களா கவும் E-Waste என்ற மின்னணு கழிவுகளாகவும் மாநிலத்தைக் குப்பை மேடாக்கி வருகிறது.
இது மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதோடு அழிக்க முடியாத கழிவுகளின் எண்ணிக் கையையும் அதிகரித்து சுற்றுப்புற சீர்கேட்டையும் ஏற்படுத் துகிறது.

மக்களின் தேவை என்ன?

மக்களுக்கு வேண்டியது அடிப்படை தேவைகளான தரமான சாலைகள், தடையற்ற மின்சாரம் / குடிநீர், பாதுகாப்பு,

நியாயமான கல்விக் கட்டணம், ஏரி / அணை / குளங்களைத் தூர் வாருதல், பொறுப்பான அரசாங்க சேவைகள் இவையே!
மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா? இதோ சூப்பர் மருந்து !
தொலைக் காட்சி, கிரைண்டர், மின் விசிறி, மடிக்கணினி போன்றவை மக்களே வாங்கிக் கொள்ள முடியும்.

இலவச மின்சாரப் பொருட்கள் அதிகரித்துப் போலியான மின்சாரத் தேவையை உருவாக்கி அனைத்து மக்களையும் கடந்த ஏழு வருடங் களாகச் சீரழித்து வருகிறது.

மின்சாரப் பற்றாக் குறையால் பல தொழில்கள் அழிந்து, இடம் பெயர்ந்து விட்டன.

வெற்று அறிக்கைகள்

அதிமுக அரசு கடந்து ஐந்து வருடங்களில் உருப் படியான செயலாக எதையும் செய்ய வில்லை.

எல்லாமே வெற்று அறிக்கைகள் தான், செயலில் ஒன்றுமே இல்லை.

புதிய சாலைகள், பாலங்கள் வரப்போகுது, கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று

இது வரை ஐந்து வருடங்களாக எத்தனை அறிவிப்பை நாம் கேட்டு இருப்போம்…! ஒன்றாவது செய்தார்களா..!

சென்னையில் அதிமுக சார்பில் கட்டப்பட்ட குறிப்பிடத் தக்க ஒரே பாலம் நெல்சன் மாணிக்கம் சாலையில் கட்டப்பட்டது மட்டுமே!
தயிர் சாதம் சாப்பிட்டு குண்டாகிட்டீங்களா?
மீதி சென்னை யில் கட்டப்பட்ட அனைத்துப் பாலங்களும் திமுக ஆட்சியில் கட்டியது அல்லது அவர்களால் துவங்கப் பட்டது.

திறப்பு விழா மட்டும் ஜெ செய்து இவர்கள் கட்டியது போல விளம்பரப் படுத்திக் கொள்வார்கள்.

சென்னையின் முக்கியப் பாலங்களான கிண்டி, அண்ணா மேம்பாலம், பாடி, கோயம்பேடு ஆகிய பாலங்கள் திமுக கட்டியதே.
மக்களின் வளர்ச்சிக் காகவும், பயன் பாட்டுக் காகவும் சிறப்பான எந்தத் திட்டங்க ளையும் அதிமுக கடந்த ஐந்து வருடங்களில் செயல் படுத்திய தில்லை.

அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று அறிக்கையை வேண்டும் என்றால் காட்டலாம்.

மதுரவயல் மேம்பாலம் ஈகோ பிரச்சனை காரணமாகக் கடந்து ஐந்து வருடங்களாக அப்படியே கிடப்பில் உள்ளது அதோடு பல நூறு கோடிகள் முடங்கியுள்ளது.

இலவசப் பொருட்களின் / சேவைகளின் அறிவிப்புகள்

கடந்த முறை செய்த தவறை திமுக இந்த முறையும் செய்யுமே என்று பயந்த நிலையில் இலவசப் பொருட்கள் அறிவிப்பை கொஞ்சம் அடக்கி வாசித்து இருந்தது. 
சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆக !
இதோட மற்ற கட்சிகளும் பொருட் களாக இல்லாமல் வேறு வகையில் சலுகையை அறிவித்து இருந்தன.

இலவசத்தால் நாம் இழந்தது என்ன?
எனவே, அதிமுகவும் இதே போல அறிவிக்கும் என்று இருந்தால், ஸ்கூட்டி, செல்போன் நூறு யூனிட் மின்சாரம்,

மடிகணினி, Wi- Fi, இணையம் இலவசம் என்று அள்ளி விட்டுள்ளது. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெசின் இல்லாதது பெரிய ஆறுதல்.

100 யூனிட் மின்சாரம் எப்படி இலவசமாக அளிக்க முடியும்?!

தமிழக மின்சாரத் துறை ஏற்கனவே படுமோசமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில் எப்படி 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்க முடியும்?! நாம் பிச்சை தான் எடுக்க வேண்டும்.
கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க !
இப்படி இலவசம் இலவசம் என்று அளித்துத் தமிழ்நாட்டைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்து விட்டார்கள் போல.

அதிமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்து இருந்தால், எதற்கு இலவ சத்தை அளிக்க வேண்டிய நிலை வரப் போகிறது.

மக்களே தாமாகவே வாக்களிக்கப் போகிறார்கள். தவறு செய்து ள்ளார்கள் அதனாலே பயம், எனவே தான் இலவச அறிவிப்பு தேவைப் படுகிறது.

“இனி செய்வோம்” என்று கூறுவதை ஏன் கடந்த ஐந்து வருடங்களில் செய்யவில்லை?

ஜெ நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்கிறார்.

ஆட்சியில் இருந்த கடந்த ஐந்து வருடங்களில் ஏன் இதை யெல்லாம் செய்ய வில்லை என்று மக்கள் யோசித்தாலே போதும்!
மழையால் எவ்வளவு சேதம் ஏற்பட்டது?! இதன் பிறகாவது அணை, ஏரியை தூர் வாரவோ, ஆழப்படுத்தவோ நடவடிக்கை எடுத்தார்களா என்றால்.. இல்லை!

எங்கெங்கு காணினும் “அம்மா அம்மா”

எங்கே பார்த்தாலும் “அம்மா அம்மா” என்று ஜெ படத்தைப் போட்டு நம் மாநிலத்தின் பெருமை யையே குலைத்து விட்டார்.
மற்ற மாநிலத்தார் எல்லாம் கிண்டலடி க்கும் படியாகி விட்டது.

எப்படி அனைத்து இடங்களிலும் ஜெ தன்னுடைய படத்தையும் தன் பெயரில்!! திட்டங் களையும் அறிவிக்க முடிகிறது?

கூச்சமாக இருக்காதா? தமிழகரசு சின்னத்தில் மட்டும் தான் ஜெ படம் வரவில்லை, மற்றபடி அனைத்தும் நடந்து விட்டது.

எதோ ஒன்றிரண்டு என்றால் கூடப் பரவாயில்லை, அறிவிக்கும் ஒவ்வோர் திட்டத்திலும் இதே நிலை.

“தமிழக அரசு” என்ற பெயரை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கமே எனக்கு வந்து விட்டது.

தமிழக அரசு என்ற பெயரில் திட்டங்கள் வந்தால் நமக்கெல்லாம் எவ்வளவு பெருமையாக இருக்கும்?!
புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்யலாம்?
குறைந்த பட்சம் “தமிழக அரசு திட்டம்” என்று கூறவில்லை யென்றாலும்

மறைந்த MGR அவர்கள் பெயரிலாவது அறிவித்து இருக்கலாம், கொஞ்சம் மரியாதையாவது இருந்து இருக்கும்.

MGR பெயர் தேர்தல் சமயத்தில் மட்டுமே ஜெ க்கு நினைவு வருகிறது. அதிமுக என்றால் “நான்” தான் என்று MGR அடையாளத்தையும் அழித்து விட்டார் .

ஆனால், இன்னும் விழும் சில “இரட்டை இலை” வாக்குக்கள் MGR க்காகத் தான் என்பதை மறந்து.

40% கமிசன்

எந்த அரசாங்க ஒப்பந்த வேலையாக இருந்தாலும் 40% கமிசன் என்ற நிலை யுள்ளது.
அதிமுக வினர் ஏற்கனவே அனைத்து பொறுப்பிலும் நிலை கொண்டு விட்டார்கள். இவர்களே தொடர்ந்தால், இவர்கள் வைப்பதே சட்டம் என்றாகி விடும்.
நீங்கள் ஏழு நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற?
கடந்த இடைத் தேர்தலில் எழுதிய கட்டுரையில் எழுதியதைத் திரும்ப இந்தத் தேர்தலிலும் நினைவு கூறுகிறேன்.

“தொடர்ந்து பத்து வருடம் டேமேஜ் செய்வதற்கும் கேப் விட்டு டேமேஜ் செய்வதற்கும் வித்யாசம் இருக்கிறது.

எப்படி யெல்லாம் யோசிக்க வைத்து விட்டார்கள்!!“

இலவசம் வேண்டவே வேண்டாம்

மக்களே! இலவச த்துக்கு ஆசைப்பட்டு வாக்களி த்தால் நமக்குத் தர்மடி விழப்போவது உறுதி.

தமிழ்நாடு மிக மோசமான மாநிலமாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

இலவசத்தால் தமிழக மக்கள் பெற்றதை விட இழந்ததே அதிகம்!

ஏற்கனவே, இலவசத்துக்கு ஆசைப்பட்டு வாக்களித் ததுக்கான பலனைத் தான் தற்போது அனுபவித்து வருகிறோம். 

அரசியல் வாதிகளை குறை கூறி பயனில்லை. இலவச த்துக்கு பல்லைக் காட்டிக் கொண்டு வாக்களிக்கும் மக்களே இதற்கு முழுப் பொறுப்பு.
இலவசத்தால் நாம் இழந்தது என்ன?
தயவு செய்து ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள். பணம் வாங்கினால் அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

“இவ்வளவு கொள்ளை அடிக்குறாணுக அவனுக கிட்ட 1000 வாங்கினால் என்ன தவறு?” என்று நினைப்பது, நம் தவறை நியாயப் படுத்தும் முயற்சியே ஆகும்..
நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்லும் “ஸ்ட்ராபெர்ரி”!
நமக்குத் தேவை இலவசங்கள் அல்ல, அடிப்படைத் தேவைக ளுக்கானத் தீர்வே!
Tags:
Privacy and cookie settings