சென்னை கடந்த 2 நாட்களாக சசிகலாவின் குரலில் பீதி தெரிகிறது. அவரது முகம் இருண் டுள்ளது. நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ என்ற சந்தேகம் வரும் வகையில் அவர் காணப் படுகிறார்.
முதல்வர் பதவியை அடைந்தே தீர வேண்டும் என சசிகலா பிடிவாதமாக உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்களின் பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக
அதிமுக எம்எல்ஏக் களை கூவத்தூரில் அவரது கட்டுப் பாட்டில் வை த்துள்ளார். தமிழக மக்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண் டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற நாள் முதல் எழுதி வைத்தே படித்து வந்த சசிகலா கடந்த செவ்வாய்க் கிழமை முதல்வர் ஓபிஎஸ் கூறிய அதிரடி குற்றச்சாட் டுகளால் நள்ளிரவு ஒன்றேகால் மணிக்கு செய்தியாள ர்களிடம் பேசினார்.
கண்களை உருட்டிய சசி
முதல் முறையாக செய்தியாளர்களை எந்த பேப்பரும் இன்றி சந்தித்த அவர் கண்களை உருட்டி புருவங்களை உயர்த்தி மிக தைரியமாக பேசினார். ஓபிஎஸ் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்க்கமாக கூறினார்.
பேச்சில் தெனாவட்டு
எம்எல்ஏக்கள் அத்தனை பேரும் அவருக்கு சாதகமாக இருந்ததால் அவர் பேச்சில் தெனாவட்டு தெரிந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ் அணிக்கு மாறும் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மன்னார்குடி கும்பல் அதிர்ச்சியடைந்துள்ளது.
முகத்தில் தெளிவு இல்லை
கடந்த 2 நாட்களாக செய்தியா ளர்களை சந்திக்கும் சசிகலாவின் முகத்தில் தெளிவு இல்லை. எதையோ பறிகொடுத்தது போன்ற சோகம் ஆட்கொண்டு அவரது முகத்தில் இருள் சூழ்ந்துள்ளது.
குரளில் நடுக்கம், தழுதழுப்பு
அவ்வப்போது குரலை உயர்த்தி பேசினாலும் குரலில் ஒரு நடுக்கமும் தழுதழுப்பும் தெரிகிறது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு பெருகி வருவதால் மன்னார்குடி கும்பலுக்கு பீதி ஏற்பட்டதன் வெளிப்பாடும்,
ஆட்சியமைக்க முடியாமல் போய்விடுமோ என்ற பீதியும் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ ஜெயலலிதாவின் முன்னாள் தோழி?