முதல்வர் பொறுப்பேற்ற முதல்வர் ஈ.பி.எஸ்.நேராக கூவத்தூர் விரைந்தார். காரணம் நாளை ரகசிய வாக்கெடுப்பில் தன்னை கவுத்திடப் போறாங்க என்கிற பயம் என்கிறார்கள்.
சில இணையத் தளங்கள் சொல்வதைப் பார்த்தால் கடும் பேரங்கள், பெரும் வாக்குறுதிகள், ஆசைகள். என இதுவரை தமிழகம் காணாத கூத்துகள் எல்லாம் நடக்கிறது.
பிராந்திகள், விஸ்கிகள், அசைவ உணவுகள். ஆடல் பாடல்கள் என அமர்களப் படுகிறது கூவத்தூர். சட்டமன்ற உறுப்பினர்களும் இது தான் தருணம் என்பது போல பல கோடிகள் பேரங்களை நடத்துகின்றனர்.
காலையில் வந்த செய்தியே பகீர் ரகம். ஒரு உறுப்பினருக்கு இருபது கோடிகள் வரை தருவதாக வாக்குறுதி கொடுத்தி ருக்கிறார்கள்.
இன்று மாலை நேர நிலவரப்படி அந்த தொகை இன்னும் அதிகமாகலாம் என்பது தான் நிலவரம்.
நாளை வாக்கெடுப்பு நடத்தி வென்றால் தான் சசி தரப்பிற்கு நிம்மதி வரும். அப்படியே வென்றாலும் இந்த உறுப்பினர்களை நான்கு வருடங்கள் பாதுகாக்க முடியுமா என்பது சந்தேகமே.
பல அரசியல் நோக்கர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கும் அரசு அமைவதை விட கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.