முப்பரிமாணம் படத்தில் சாந்தனு ஹீரோ. சிருஷ்டி டாங்கே ஹீரோயின். இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக இருந்த அதிரூபன்.
அவர் ஷூட்டிங் சமயத்தில் கொடுத்த தொல்லை களால் தாங்க முடியாமல் அழுது விட்டேன் என்று சிருஷ்டி டாங்கே ஆடியோ ரிலீஸில் பேசினார். “கதை நல்லா இருக்கேன்னு ஒப்புக் கொண்டேன்.
ஆனால், ஷூட்டிங்கில் யாரு யாருடனும் பேசக் கூடாது. போனை நினைத்தே பார்க்க கூடாது. எங்க வீட்டுக்கு கூட பேச முடியலை. ஆளுக்கு உடையோட குளிக்காமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் இருக்க வேண்டி இருந்தது.
ஒரு கட்டத்தில் அழவே ஆரம்பித்து விட்டேன். என் அப்பவிடம் சொல்லி அழ, அவர் படமே வேண்டாம் வா என்றார்.அதனால் இயக்குனரிடம் நடிக்க மாட்டேன்னு சொல்ல, அவர் சமாதானப் படுத்தினார்.
இப்போது படத்தை பார்க்கும் போது தான் இது எனக்கு ஒரு திருப்பு முனை படம் என்று தோன்றியது என்று பேசினார் சிருஷ்டி டாங்கே. ஏம்மா, பாலா துணை இயக்குனர் என்றால் தெரியாதா?