முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது பலத்தை இன்று நிரூபிக்க சட்டசபை கூடியுள்ளது. இதில் பங்கேற்க வந்த எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினின் கார் சோதனை செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு திமுக சார்பில் தெரிவிக் கப்பட்டு கோஷங்கள் எழுப்பப் பட்டன. இந்நிலையில், சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்,
வேலூர் சிறைக் கைதிகள் போல் எம்எல்ஏக்கள் சட்ட சபைக்குள் போலீசாரால் அழைத்து வரப்பட்டனர் என்று குற்றம் சாட்டினார். எம்எல்ஏக்கள் என்ன சிறைக் கைதிகளா என்றும் கேள்வி எழுப்பினார்.