உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், குஜராத் கழுதைகளைக் கண்டு பயப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பரெய்க் நகரில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது: தேர்தல் பிரச்சாரத்தின் போது, பல்வேறு அரசியல் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது வழக்கமானது தான்.
அந்த வகையில் அகிலேஷ் யாதவ் என்னையும் பாஜகவையும் குறை கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவர் கழுதைகளைப் பற்றி தாக்கி பேசி உள்ளது வேடிக்கையாக உள்ளது.
அப்படி யானால் அவர் கழுதைகளைப் பார்த்து பயப்ப டுகிறாரோ? அதுவும் ஆயிரக்க ணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் (குஜராத்) உள்ள கழுதை களைப் பார்த்து பயம் ஏன்?
இந்த நாட்டு மக்கள் தான் எனது எஜமானர்கள். அவர்களு க்காக இரவும் பகலும் பணியாற்றுகிறேன். இதற்காக கழுதைகள் எனக்கு உத்வேகமாக உள்ளன. ஏனெனில் அவை எஜமானர்களுக்கு விசுவாசமானவை.
உங்களுடைய (அகிலேஷ்) ஜாதிபேத மனப்பான்மை விலங்கு களிலும் வெளிப் படுவது வியப்பாக உள்ளது. கழுதையை இழிவானதாக நீங்கள் கருதுகிறீர்கள்.
ஆனால், உங்கள் தலைமை யிலான அரசுதான் முன்பு ஒரு முறை எருமைகள் (அமைச்சர் அசம் கானுக்கு சொந்தமான) காணாமல் போன போது அதைத் தேட தீவிர முயற்சி மேற்கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குஜராத் சுற்றுலா துறையின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளார்.
இதன் அடிப்படையில், கழுதைகள் சரணாலயத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தொடர்பான டிவி விளம்பரத்தில் அவர் தோன்றுகிறார்.
இந்நிலையில், குஜராத் கழுதைகளுக்கான விளம்பரத்தில் தோன்றுவதை அமிதாப் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரேபரேலியில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பிரச்சாரத்தில் அகிலேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.