தொண்டர்களை அடிப்பது, பத்திரிகை யாளர்களை விமர்சிப்பது என்பது தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கம். சிறிது காலம் அமைதியாக இருந்த விஜயகாந்த், பெரம்பலூரில்
நேற்று தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்து தமது திருவிளை யாடலை மீண்டும் அரங்கேற்றி யுள்ளார்.
பொதுக் கூட்டங்களில் பேசும் போதும் பத்திரிகை யாளர்களை சந்திக்கும் போதும் நிதான மற்றவராகவே நடந்து கொள்வார் விஜயகாந்த்.
பொதுவாக ஒருமையில் பேசுவதும் பத்திரிகை யாளர்கள் மீது காறி துப்புவதும் வழக்கமாக வைத்தி ருக்கிறார்.
கட்சி தொண்டர் களுக்கு எந்த நேரத்தில் விஜயகாந்திடம் இருந்து தாக்குதல் வரும் என தெரியாத பதற்றம் இருக்கும்.
பொது இடம் என்று கூட பார்க்காமல் கட்சி நிர்வா கிகளை அடிப்பதையும் வழக்கமாக கொண்டவர் விஜயகாந்த்.
பெரம்பலூரில் 'உங்களுடன் நான் என்கிற தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நேற்று விஜயகாந்த் சென்றிருந்தார். அப்போது தொண்டர் ஒருவர் விஜயகாந்த் காது அருகே, கேப்டன் வாழ்க என கோஷம் போட்டார்.
இதில் கடுப்பான விஜயகாந்த், அந்த தொண்டர் கன்னத்தில் பளார் என அறை விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.