சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படும் சசிகலா தனது விருப்பப் பட்டியல் ஒன்றை சிறை அதிகாரி களுக்கு வழங்கி யிருந்தார். இதை மனுவாகவும் இன்று அவரது வக்கீல்கள் நீதிபதியிடம் அளித்தனர்.
ஆனால் அதில் பல சலுகைகளை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். கிட்டத்தட்ட 3.6 ஆண்டு களை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் கழிக்க வுள்ளார் சசிகலா.
அவருடன் இளவரசி, சுதாகரனும் சிறையில் கழிக்க வுள்ளனர். இந்த நிலையில் சிறையில் சில வசதிகளை எதிர் பார்த்து அதை மனுவாக தனது வக்கீல்கள் மூலம் நீதிபதியிடம் அளித்தார்.
அவற்றில் பெரும்பாலா னவற்றை இன்று நீதிபதி நிராகரித்து விட்டார். சில கோரிக் கைகள் மட்டும் ஏற்கப் பட்டது.
வெஸ்டர்ன் டாய்லெட்
வேண்டும் என்று கேட்டிருந்தார் சசிகலா. அதே போல வீட்டுச் சாப்பாடு தேவை, வாக்கிங் போக இடம் தேவை, 24 மணி நேர தண்ணீர் வசதி தேவை என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதில் வீட்டுச் சாப்பாடு, வாக்கிங் வசதி நிராகரிக்கப் பட்டு விட்டது. டாய்லெட்டும் ஒத்துக் கொள்ளப்பட வில்லை.
கட்டில் டிவி
சசிகலாவுக்கு கட்டில் ஒதுக்கப் பட்டுள்ள தாம். அதே சமயம், டிவி தரப்பட வில்லை என்று தெரகிறது.
அவருக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருப்ப தால் தான் கட்டில் வசதியாம். இல்லா விட்டால் தான் தரை தான் கிடைத் திருக்கும்.
விஐபி அறை கிடையாது
அதேபோல அவர் விஐபி அறையும், ஏசி அறையும் கேட்டிருந்தார். அதுவும் நிராகரிக் கப்பட்டு விட்டதாம். கைதிகளுக்கு சாதாரணமாக ஒதுக்கப் படும் அறை தான் தரப்பட் டுள்ளதாம்.
பாதுகாப்பு வசதி
சசிகலா விஐபி கைதி என்பதால் அவருக்கு சிறையில் பாதுகாப்பும் வழங் கப்படும். 24 மணி நேர பாதுகாப்பு அவருக்குக் கிடைக்கும். முன்பு ஜெயலலிதா வுடன் சேர்ந்து தங்கியி ருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லாமல் தங்கப் போகிறார்.
2வது முறை
பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சசிகலா வருவது இது 2வது முறையாகும். முன்பு ஜெயலலிதா வுடன் இங்கு 21 நாட்கள் தங்கியி ருந்தது நினைவி ருக்கலாம். தற்போது 3.6 வருட காலம் அவர் தங்கப் போகிறார்.