உலகம் முழுவதும் உள்ள திருமணம் ஆன ஆண் மற்றும் பெண் என இருவரின் எண்ணங் களுமே சந்தோஷமான திருமண வாழ்க்கை மற்றும் அதற்கு வலுசேர்க்கும் செக்ஸ் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும்.
இந்த புரிதலை மனதால் ஏற்று ஒருவருக் கொருவர் விவாதித்து, ஒற்றுமையாக ஈடுபட்டால் தான் அந்த வாழ்க்கை அமையும். அதற்கு தேவையான ஆலோசனை களையும், முறையான வழிமுறை களையும் பின்பற்றினாலே போதும்.
ஆனால், இன்றைய வளர்ந்துள்ள தொழில் நுட்பங்கள் அதற்க கேடு விளை விக்கும் ஒன்றாகத் தான் இருக்கின்றது.
நாம் சமூக வலை தளங்களை திறந்தாலே, நம்மை தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய விஷயங்கள் தான் முதலில் இருக்கின்றன.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரு வார்த்தையாக எது இருந்த தென்றால், PORN என்று சொல்லக்கூடிய ‘ஆபாசம்’ தான் அதிகமாக இருந்ததாக கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டது.
அந்தளவுக்கு இளம் தலை முறையை சமூக வலை தளங்களில் வலம் வரும் ஆபாச இணையத் தளங்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பாதிப்பு இளம் தலை முறையை மட்டுமல்ல, திருமணமான ஆண் மற்றும் பெண்களையும் தான் என்றால் அது மிகையாகாது.
திருமண மானவர்கள் இயற்கை யான செக்ஸ் வழிமுறையை மீறி, இணைய தளங்களின் மூலம் தங்களின் செக்ஸ் வாழ்வை அமைத்துக் கொள்ள விரும் புகின்றனர்.
இந்த நிகழ்வு ஒரு கட்டத்தில் செக்ஸ் உறவை தாண்டி, வெறும் வீடியோ பார்ப்பதில் அடிமையாகக் கூடிய சூழல்கள் தான் ஏற்படு கின்றது.
இதனால், கணவன் மற்றும் மனைவிக் கிடையே உள்ள தொடர்புகள் குறைகின்றது. ஒரு கட்டத்தில் இருவருமே மனரீதியான பாதிப்புக் குள்ளாகி, விவாகரத்து பெறும் சூழலுக்கு தள்ளப்ப டுகிறார்கள்.
இதனால், ஆபாச வீடியோக்களை பார்ப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இளம் தலைமுறையை அதிலும் பாதுகாப்பதில் நாம் அக்கறை காட்ட வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கிய மான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.