ஆவடி தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டிய ராஜனுக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தெரிவித்தனர்.
சசிகலா முதல்வராக அரியணை ஏற காய் நகர்த்திய போது, திடீரென வீறு கொண்டு எழுந்து, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க் கொடி உயர்த்தினார்.
இந்நிலையில் தங்கள் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்களை மக்கள் தொடர்பு கொண்டு ஓ.பி.எஸ் பக்கம் போகுமாறு அழைப்பு விடுக்க தொடங்கினர்.
Mafoi Pandiarajan Gets A Grand Welcome pic.twitter.com/fnEv75Bx4b— Trollywood (@TrollywoodOffl) February 19, 2017
அப்படி மக்களின் அழைப்புக்கு மரியாதை கொடுத்து சசிகலா குரூப்பிலிருந்து ஓ.பி.எஸ் பக்கம் சென்றவர் தான் அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன்.
நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா தரப்பு கை காண்பித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது.
இதனால் ஓ.பி.எஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஏமாற்ற மடைந்தனர். அதே நேரம், தொகுதி மக்களோ அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
மாஃபா பாண்டிய ராஜனுக்கு ஆவடி தொகுதியில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது. தொகுதிக்கு சென்ற அவரை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
— b g venkatesh- BG (@InvestAdvice) February 19, 2017
தங்கள் மனதை புரிந்து கொண்டு அமைச்சராக இருந்த போதிலும், அரசுக்கு எதிராக திரும்பியதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதே நேரம், சசிகலா தரப்புக்கு ஆதரவாக வாக்களித்த 122 அதிமுக எம்.எல்.ஏக்களும் இன்னும் தொகுதி பக்கம் போக வில்லை.