ரிசார்ட்டை நாசம் செய்து விட்டார்கள்... எம்எல்ஏ க்கள் மீது புகார் !

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப் பட்டிருந்த போது மது பாட்டிலும் கையுமாக பாரிலேயே பழியாக கிடந்தனர் என்று ரிசார்ட் நிர்வாகிகள் கூறி யுள்ளனர்.
ரிசார்ட்டை நாசம் செய்து விட்டார்கள்... எம்எல்ஏ க்கள் மீது புகார் !
பிப்ரவரி 7ஆம் தேதியன்று இரவு ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் தியானம் இருந்து விட்டு சசிகலா விற்கு எதிராக பேட்டி அளித்தார். தான் கட்டாயப் படுத்தி ராஜினாமா பெறப்பட்ட தாகவும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து அதிமுக பிளவு பட்டது. சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். 11 எம்பிக்கள் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். 

ஓபிஎஸ் பக்கம் எம்எல்ஏக்கள் சென்று விடாமல் இருக்க 10 நாட்கள் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சிறை வைக்கப் பட்டனர். 

அந்த 10 நாட்களும் எம்எல்ஏ க்கள் என்ன செய்தார்கள் என்று ரிசார்ட் உரிமை யாளர்கள் முரசொலி நாளிதழுக்கு பேட்டி அளித் துள்ளனர்.

மது கேட்டு நச்சரிப்பு
ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்எல்ஏ க்கள் பலர் அடிக்கடி மது கேட்டு நச்சரித்தனர். அவர்களுக்கு பாண்டிச்சேரி சென்று மது வாங்கி வந்தோம். ஆனாலும் மது தினசரியும் தீர்ந்து விட்டது.

ஸ்டாக் தீர்ந்து போச்சு

எங்களுடைய பாரில் ஓரளவே மது பாட்டில்கள் இருந்தன. எல்லோரும் ஒரே நேரத்தில் மது பாட்டில் கேட்டு நச்சரித்தனர். கொஞ்சம் தாமத மானாலும் சர்வர்கள் மீது எரிந்து விழுந்தனர்.

ஆயிரம் பேர் கும்மாளம்
ரிசார்ட்டை நாசம் செய்து விட்டார்கள்... எம்எல்ஏ க்கள் மீது புகார் !
எம்எல்ஏ க்கள், அமைச்சர்கள் மட்டு மல்லாது, உதவியாளர்கள், கார் டிரைவர்கள் என ஆயிரத் திற்கும் மேற்பட்டவர் கூடி கும்மாளம் போட்டதில் வசதியான எங்கள் ரிசார்ட் நாசமாகி விட்டது.

அண்டா சமையல்

எங்கள் சமையலறை சிறியது தான் ஆனால் ஆயிரம் பேருக்கு சமைக்க முடியாது. தினசரியும் பல வகை உணவுகள் அண்டா வைத்து சமைத்து சாப்பிட்டு சொகுசு ரிசார்ட்டை நாசம் செய்து விட்டார்கள்.

பராமரிப்பு செய்ய 
எம்எல்ஏக்கள் தவிர 10 நாட்களாக எங்கள் ரிசார்ட்டிற்கு எந்த பயணிகளும் வரவில்லை. மீண்டும் எம்எல்ஏ க்கள் வந்தால் எங்களின் வியாபாராம் படுத்து விடும் என்றும் ரிசார்ட் உரிமை யாளர்கள் கூறி யுள்ளனர். 

ரிசார்ட்டை பராமரிக்கவே இப்போது தற்காலிகமாக மூடியுள்ளோம் என்றும் உரிமையா ளர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings