அங்க என்னப்பா சத்தம்.. பேசிகிட்டு இருக்கோம் சின்னய்யா !

கூவத்தூர் ரிசார்ட்ஸ்சில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திர மாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்று அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார்.
அங்க என்னப்பா சத்தம்.. பேசிகிட்டு இருக்கோம் சின்னய்யா !
செய்தியாளர் களை தாக்கியது எங்கள் ஆட்களில்லை என்றும் அவர் தெறிவித் துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரு அணியாக செயல்பட்டு வருகிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களை ஒரு சொகுசு பேருந்தில் வைத்து 

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

அருகில் உள்ள சில ரிசார்ட்களிலும் தங்க வைக்கப் பட்டனர். எம்எல்ஏக்கள் மற்றவர் களை சந்திக்கவும், தொலை பேசியில் பேசவும் தடை விதிக்கப்பட்டது.

எம்எல்ஏக் களை கண்காணிக்க மன்னார்குடி யில் இருந்து அடியாட்கள் களமிறக்கப் பட்டுள்ளனர். தங்கள் பகுதி எம்.எல்.ஏ வை காணவில்லை என பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. ஆர்.டி.ராம சந்திரன், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ. எம்.கீதாவை ஆகியோரை மீட்டு நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என,
குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர். இளவரசன் மற்றும் வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.டி.செல்வம், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., கூவாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர்,

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதனை யடுத்து கூவத்தூர் ரிசார்ட்டில் இன்று காலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டுள்ளனர். இந்த ஆய்வில் காஞ்சிபுரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.
இது பற்றி செய்தி சேகரிப்பதற்காக கூவத்தூர் ரிசார்ட்ஸ் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை சிலர் நபர்கள் கல் வீசி தாக்கினர். இது சில செய்தியாளர்கள் மீது விழுந்த ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று தற்காலிகமாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசம், 

கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப் பாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

இது போன்ற தவறான செய்தியை எதிர் அணியினர் தான் பரப்பிக் கொண்டிருக் கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings