சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி இன்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பளித் துள்ளது. இது சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்பதால்
தமிழகத்தில் உள்ள அனைவரின் கவனமும் உச்ச நீதிமன்றத்தை நோக்கி திரும்பி யுள்ளது. சசிகலாவிற்கு இது மிகமுக்கி யமான பின்னடை வாகும்.
அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டதன் காரணமாக தமிழக அரசியல் களத்தில் கடும் குழப்பம் ஏற்பட் டுள்ளது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது சசிகலாவா?
அல்லது முதல்வர் பன்னீர் செல்வமா? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு இந்த குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த விவகார த்தில் உரிய முடிவெடு க்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்தி வருவதாக சசிகலா தரப்பில் குற்றம் சாட்டியது. உச்சநீதிமன்ற தீர்ப்பு க்காகவே அவர் காலம் தாழ்த்தி வந்தார் என்று கூறப்பட்ட நிலையில் ஆளுநர் எதிர் பார்த்த தீர்ப்பு வெளியானது.
சசிகலாவா? ஓ.பன்னீர் செல்வமா? என்று முதலில் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் தற்போது தீர்ப்பு தெளிவாக வந்து விட்டதால் சசிகலாவை இந்த வாய்ப்பி லிருந்து ஆளுநர் எளிதாக தூக்கி விடலாம்.
அடுத்து , முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சட்ட சபையில் தனது பெரும்பான் மையை நிரூபிக்க உத்தர விடலாம்.