சசிகலாவு க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காதது ஏன் என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மனம் திறந்துள்ளார். இது குறித்து, ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்த போது கூறியதாவது:
45 ஆண்டுக்கால எனது அரசியல் வாழ்கையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அண்மையில், தமிழகத்தில் நடைபெற்ற அசாதாரண அரசியல் சூழ்நிலையால், மிகப்பெரிய அளவில் நான் விமர்சன த்துக்கு ஆளானேன்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக நான் பதவிப் பிரமாணம் செய்து வைக்காததற்கான காரணத்தை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்தது.
அண்மைக் கால தமிழக அரசியல் சூழ்நிலை களின் போது, நான் எடுத்த அனைத்து முடிவுகள் மற்றும் நடவடிக்கை களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சசிகலாவைப் பொறுத்த வரை, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதி அல்ல. அவரை சட்ட மன்றக் கட்சித் தலைவராக அ.தி.மு.க சட்டமன்ற உறுப் பினர்கள் தேர்ந்தெடுத்த நிலையில்,
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்க விருப்பதாக உச்சநீதி மன்றம் அறிவித்தது.
அதுபோன்ற சூழ்நிலை யில், சசிகலாவு க்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக, எந்த முடிவையும் எடுக்கும் முன், உச்சநீதி மன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பது நல்லது என்று எனக்குத் தோன்றியது.
தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சட்ட நிபுணர்கள் சோலி சொராப்ஜி, கே. பராசரன் ஆகியோரு டன் ஆலோசனை நடத்தினேன்.
அந்த ஆலோசனைகள் பற்றிய முழு விவரங் களையும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிக்கை யாக அனுப்பி வைத்தேன். அந்த அறிக்கை குறித்து என்னால் எதுவும் கூற முடியாது.
உடல்நலக் குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, அவரைப் பார்க்க ஓரிருமுறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்படி ஒருமுறை நான் சென்ற போது, தான் குணமடைந்து வருவதைக் குறிக்கும் வகையில், ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.