நம்பிக்கை வாக்கெடுப்பை வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணி, திமுக, காங்கிரஸ் கோரிக்கை யையும் சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
தமிழக சட்ட சபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப் பட்டிருந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார்.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், காங்கிரஸ் கட்சியினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் ஸ்டாலின் பேசினார்.
ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ள போது இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு அவகாசமாக நடத்துவது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதனை சபாநாயகர் நிராகரித்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் எப்படி வாக்கெடுப்பு நடத்துவது என்பது எனது உரிமை என்று கூறினார்.
சபாநாயகரின் உரிமையில் யாரும் தலையிட முடியாது என்று கூறிய தனபால், வாக்கெடுப்பு இன்றே நடக்கும் என்று கூறினார்.
ஆளுநரின் அறிவுறுத்தலின் படியே நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்கிறது என்று கூறிய சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க ட்சிகளின் கோரிக்கை யையும் நிராகரித்தார்.
தொடர்ந்து அமளி நீடிக்கிறது. வேறொரு நாளில் வாக்கெடுப்பை நடத்த திமுக, ஓபிஎஸ், காங்கிரஸ் தொடர் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ஒருமணி நேரமாக அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால் வாக்கெடுப்பை நடத்த முடியாமல் தனபால் தவித்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்கெடுப்பு நடக்காமல் இழுபறி நீடிக்கவே, உறுப்பினர்கள் அமைதியாக இருங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய தனபால் வாக்கெடுப்பு குறித்த எனது அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர், எம்.எல்.ஏக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களி க்கலாம் என்று கூறினார்.