சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவை அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன் நேற்று போய் சந்தித் துள்ளார்.
அப்போது அவரிடம், என்னைப் பார்க்க சியெம் வரமாட்டரா என்று கோபத்தோடு கேட்டாராம். சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தான் இப்போது முதல்வராக இருக்கிறார்.
பதவியேற்ற உடனேயே பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்திப்பார் பழனிச்சாமி என்று கூறப்பட்டது.
இது அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் செல்லலாம் என்று சிலர் கூறவே எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக தலைமைச் செயலகம் சென்று விட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததை டிவியில் பார்த்து ரசித்த சசிகலா, தன்னை பார்க்க வந்த வழக்கறி ஞர்களிடம் பாராட்டி னாராம். சிறையில் இருந்தே தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்ச ர்களுக்கு வாழ்த்து க்களை கூறினார் களாம்.
எடப்பாடி பழனிச்சாமி
முதல்வராக முறைப்படி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி நேற்று 5 முக்கிய பைல்களில் கையெழுத்து போட்டு பணியை தொடங்கி விட்டார்.
ஆனால் சசிகலாவை சந்திக்க சிறைக்கு இன்னும் போக வில்லை. காரணம் முதல்வராக இருந்து கொண்டு சிறையில் இருக்கும் குற்ற வாளியை சந்திக்கப் போகக்கூடாது என்ற புரோட்டக்கால் தானாம்.
டிடிவி தினகரன் சந்திப்பு
சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனும், ஜெயலலிதா வின் அண்ணன் மகன் தீபக்கும் நேற்று சசிகலாவை பார்த்து பேசினார்கள். அப்போது பேச்சு எல்லாம் தமிழக சிறைக்கு மாற்றுவது தொடர்பாகவே இருந்ததாம்.
அப்போது தினகரன், கொஞ்ச நாள் பொருத்துக் கொள்ளுங்கள். எப்படியாவது தமிழகத்திற்கு மாற்றி விடுகிறோம் என்று கூறினாராம்.
வசதி செய்யுங்க
கர்நாடக அரசை சம்மதிக்க வைக்க காங்கிரஸ் அகில இந்திய தலைமை யோடு பேசி வருகிறோம் என்று தினகரன் சொல்லி யிருக்கிறார்.
சில வசதிகளை ஏற்பாடு செய்து தர ஆக்சன் எடுக்குமாறு கேட்டுக் கொண்டாராம் சசிகலா. இதனை யடுத்தே அவர் கேட்ட ஃபேன், டேபிள் சேர், கட்டில், டிவி வசதிகளை ஏற்பாடு செய்தார்களாம்.
சிஎம் வரமாட்டாரா?
என்னைப் பார்க்க சி.எம்.வரமாட்டாரோ? என கோபமாக கேட்டி ருக்கிறார் சசிகலா. முதல்வராக இருப்பதால் சில ப்ரோட்டகால் இடிக்கிறது , அதனால் தான் உடனடியாக அவர் வர வில்லை.
நிச்சயம் வருவார் என சொல்லி விட்டு வந்தாராம் தினகரன். முதல்வர் போகா விட்டால் என்ன முக்கியமான சில அமைச்சர்கள் இன்று போய் சசிகலாவை சந்தித்து விட்டு வந்திருக் கிறார்களே அது போதாதா?