ஆளுநர் மீது வழக்கு போடுவேன்... சு.சு !

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில், சசிகலாவை முதல்வராக்க, ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங் களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
ஆளுநர் மீது வழக்கு போடுவேன்...  சு.சு !
இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் நாளைக்குள், முடிவு எடுக்காவிடின் அரசியலமைப்பு சட்டம் 32-பிரிவின்படி ஆளுநர் மீது வழக்கு தொடரப்படும்.
குறிப்பாக, குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கை என்ற புகாரில் வழக்கு தொடரப்படும்' என்று ஆளுநருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings