சென்னையில் இன்று அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் தனியாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த பொன்னையன்,
எம்.எல்.ஏ. க்கள் செம்மலை, பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் கோட்டைக்கு சென்று சபாநாயகர் தனபாலை சந்தித்தார்கள்.
அப்போது சட்டசபையில் நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பின்னர் தலைமை செயலகத்தில் செம்மலை நிருபர்களிடம் கூறும் போது, நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வோம்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம் என்றார்.