எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்து விடுமா? திக் திக் எடப்பாடி !

அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில் தமக்கு பெரும்பான் மைக்கான 117 எம்.எல்.ஏ க்கள் ஆதரவு கிடைத்து விடுமா என்ற தவிப்பில் இருந்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்து விடுமா? திக் திக் எடப்பாடி !
தமிழக சட்ட சபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ க்கள். இதில் சபாநாயகர், நியமன உறுப்பினர்கள் தவிர்த்து மொத்தம் 232.

ஜெயலலிதா மறைவால் தற்போது மொத்தம் எம்.எல்.ஏ க்கள் 231 மட்டுமே உள்ளனர். சட்ட சபையில் பெரும் பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ க்கள் ஆதரவு தேவை.

124 எம்.எல்.ஏக்கள்

எடப்பாடி பழனிச்சாமி தமக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் பட்டியல் கொடுத்தி ருந்தார். இதனால் எடப்பாடி பழனிச் சாமிக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்.

122 ஆக குறைவு
இதை யடுத்து இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும் பான்மையை நிரூபிக்க உள்ளார். 

இந்த நிலையில் 124 எம்.எல்.ஏ க்களில் நேற்று மயிலாப்பூர் நடராஜ் இன்று கோவை வடக்கு அருண்குமார் ஆகியோர் எடப்பாடிக்கு எதிர்ப்பு என அறிவித்து விட்டனர்.

மேலும் 10 பேர் எஸ்கேப்?

இதனால் எடப்பாடி பழனிச் சாமிக்கு 122 எம்.எல்.ஏ க்கள் மட்டுமே தற்போது ஆதரவு உள்ளது. இருப்பினும் இவர்களில் குறைந்தது 10 பேர் ஓபிஎஸ் அணிக்கு போகக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை கிடைக்காமல் அரசு கவிழும் நிலை ஏற்படும்.

சபாநாயகர் வாக்கு
சபாநாயகரைப் பொறுத்த வரையில் தேவைப் பட்டால் வாக்களிப்பார். நியமன எம்.எல்.ஏ க்கு வாக்குரிமை கிடையாது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

கருணாநிதி

திமுகவைப் பொறுத்தவரையில் அக்கட்சி தலைவர் கருணாநிதி சட்ட சபைக்கு வர இயலாது. ஆகையால் எஞ்சிய 88 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்பர். 

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 1 எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ க்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.

108 வாக்குகள்
தற்போதைய நிலையில் திமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சிகளின் 97 வாக்குகள், ஓபிஎஸ் அணியின் 11 வாக்குகள் என மொத்தம் 108 வாக்குகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விழுவது உறுதியாகி உள்ளது. 

எதிர் பார்த்தபடியே 117 எம்.எல்.ஏ க்கள் கிடைத்து விடுமா? அரசு கவிழுமா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும்.
Tags:
Privacy and cookie settings