எச்.1-பி விசா ரத்து.. சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிர்ச்சி !

அமெரிக்காவின் திடீர் உத்தரவால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிர்ச்சி இந்திய உள்ளிட்ட பல்ேவறு நாடுகளைச் சேர்ந்த சாப்ட்வேர், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள்
எச்.1-பி விசா ரத்து.. சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிர்ச்சி !
விரைவாக எச்.1-பி. விசாபெறும் முறையை ஏப்ரல் 3-ந் தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அரசு நேற்று திடீரென அறிவித்தது.

இந்த உத்தரவால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வசிக்கும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்தல் வாக்குறுதி

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை இந்தியர்கள், சீனர்கள் பறிப்பதாக தேர்தல் நேரத்தில் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பு ஏற்றால், அமெரிக்கர் களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பேன். மற்ற நாட்டவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவேன் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

முதல் 'செக்'
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் எச்.1-பி விசாக்களை வழங்குவதை கட்டுப்படுத்த வகை செய்யப் பட்டது.

இதன்படி, எச்.1-பி பெற விண்ணப்பம் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ.40 லட்சம்(60 ஆயிரம் டாலர்) ஊதியம் பெறுபவர் களாக இருக்க வேண்டும் என்று இருந்த விதிமுறை இருந்தது.

இது மாற்றப்பட்டு, ஆண்டுக்கு ரூ.88 லட்சத்து 40 ஆயிரம் (1 லட்சத்து 30 ஆயிரம் டாலர்) ஊதியம் பெறுபவர்கள் தான் 

எச்.1-பி விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று திருத்தம் செய்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சமீபத்தில் மசோதா தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மசோதாவால் இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் வேலையில் அமர்த்த முடியாமல், அவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

திடீர் உத்தரவு
இந்த நிலையில் மேலும் ஒரு அதிரடியாக அனைத்து வகையான எச்.1-பிவிசாக்களையும் விரைவாக வழங்கும் முறையை நிறுத்தி நேற்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்ப தாவது-

6 மாதங்களுக்கு

2017ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனைத்து வகையான எச்.1-பி விசா விண்ணப்பங் களையும் விரைவாக பரிசீலனை செய்து, 

விசா வழங்கும் முறையை தற்காலிக மாக நிறுத்தி வைக்கிறோம். இந்த தடை அடுத்த 6 மாதங் களுக்கு இருக்கும்.

விரைவு விசா
வழக்கமாக எச்.1-பி விசாவுக்கு விண்ணப் பித்தால் அது ஆய்வு செய்யப்பட்டு விசாகிடைக்க 3 முதல் 6 மாதங்கள் ஆகும். இது சாதாரண எச்.1-பி விசா பெறும் முறை.

ஆனால், பிரிமியம் முறை அதாவது, வேகமாக விசா பெறும் முறை என்பது கூடுதலாக ரூ.81 ஆயிரம்(1,225டாலர்) கட்டணம் செலுத் தினால், 15 நாட்களுக்குள் விசா கிடைக்குமா?

அல்லது கிடைக்காதா? என்பது குறித்த அறிக்கை கிடைக்கும். ஒரு வேளை விசா கிடைக்கா விட்டால் கூடுதலாக செலுத்திய தொகை திருப்பி அளிக்கப்படும்
எச்.1-பி விசா ரத்து.. சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிர்ச்சி !
கூடுதல் கட்டணத் துடன், விரைவு எச்.1-பி விசா பெறும் முறை தான் ஏப்ரல் 3-ந்தேதியில் இருந்து ரத்து செய்யப் பட்டுள்ளது.

இந்த தடை காலத்தில் எந்த நாட்டைச் சேர்ந்த வரும் படிவம்1-907, விரைவு செயல்பாட்டு சேவை படிவம் 1-129 ஆகிய வற்றை தாக்கல் செய்ய முடியாது. 

இந்த தற்காலிகத் தடை எப்போது நீக்கப்படும் என்பது குறித்து பின்னால் அறிவிப்பு செய்யப்படும்.

தள்ளுபடி

விரைவு விசா பெறும் முறை நிறுத்தப் பட்டு இருப்பதால், எந்தவிதமான எச்.1-பிவிசாக் களையும் தள்ளுபடி செய்ய முடியும்.

படிவம்1-907, விரைவு விசா சேவை படிவம் 1-129 என இரு பிரிவுகளில் தாக்கல் செய்து இருந்தாலும் அதையும் ரத்து செய்ய முடியும்.

கடிதம்
பிரிமியம் செயல்பட்டு முறை ரத்து செய்யப்பட்டு இருப்பதால், எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்கள், தங்களின் விசாவை துரிதப் படுத்த வேண்டுகோள் கடிதம் அளிக்க வேண்டும்.

அந்த கடிதத்தின் அடிப்படை யில், படிப்படியாக ஒவ்வொரு கடிதத்தின் அடிப்படையில் பரிசீலிக் கப்படும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

எச்.1-பி விசா என்றால் என்ன?

மருத்துவம், ஐ.டி. பொறியியல், உள்ளிட்ட உயர்படிப்பு படித்த வெளிநாட்ட வர்கள், அமெரிக்க நிறுவனங் களில் சென்று பணியாற்ற வழங்கப் படுவது எச்.1-பி விசா ஆகும்.

இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டு 85 ஆயிரம் பேருக்கு எச்.1-பி விசா வழங்கப் பட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings