22 ரூபாயிலிருந்து 900 கோடி 'வசந்த் அன் கோ' !

குடிசையி லிருந்து கோபுரத்திற்கு மாறிய திரு எச் வசந்த குமாரின் கதை, ஒருவர் ஆடம் பரமான மேலாண்மை பட்டங்கள் 
22 ரூபாயிலிருந்து 900 கோடி 'வசந்த் அன் கோ' !


இல்லாமலும் வெற்றி பெற்ற தொழிலதிப ராக மாற முடியும் என்பதை உணர்த் துகிறது.

வசந்தகுமார் விற்பனை யாளராகத் தன் தொழிலைத் தொடங்கி, ஒவ்வொரு தடைக்கற் களையும் படிக்கற் களாக மாற்றினார்.

மளிகைக் கடை

38 வருடங் களுக்கு முன்பு தன் நண்பரால் வாடகைக்கு அளிக்கப் பட்ட மளிகைக் கடையை வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் விற்கும் கடையாக மாற்றினார்.

வசந்த் & கோ

இன்று அவர் வசந்த் & கோ என்ற மிகப்பெரும் வீட்டு உபயோகப் பொருள் விற்கும் சில்லறை

வணிகச் சங்கிலித் தொடர் கடைகளை 64 கிளை களுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரியில் நடத்துகிறார்.

22 ரூபாயிலிருந்து 900 கோடி 'வசந்த் அன் கோ' !


வணிகக் கோட்பாடு

அவரின் வணிகக் கோட்பாடு, குறைந்த வருவாய் பிரிவு நுகர்வோர் உள்ள ஊரகச் சந்தையில் களம் இறங்கி, அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்க வைப்பதேயாகும்.

தவனை முறை விற்பனை உக்தி

அவர் பொருளின் விலையில் பாதிப் பணத்தை மட்டும் 6 மாதங்களில் கட்ட சொன்னார். மீதிப் பணத்தைப் பொருள் விற்கப் பட்டதும் தவணை முறையில் பெற்றுக் கொண்டார்..

இம்முறை மூலம் யாரும் பணம் கட்டாதவர் என்னும் நிலை ஏற்படாமல் என்பதை உறுதி செய்து கொண்டார்.

தமிழக அரசியல்

இன்று வசந்த குமார் தமிழக அரசியலிலும் கோலோச்சி காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ வாகவும் இருக்கிறார்.

வசந்த் டிவி என்ற தமிழ் பொழுது போக்கு தொலைக் காட்சியையும் நடத்துகிறார்.

படிப்பு, வேலையும்

நான் தமிழில் பட்டப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு இரண்டையும் அஞ்சல் வழியில் பயின்றேன்.

பின்பு விஜிபியில் விற்பனை யாளராகச் சேர்ந்தேன். 8 வருடங்கள் அங்கு வேலை செய்தபிறகு வேலையை விட்டேன். 

என்னிடம் பணம் ஏதும் இல்லை. ஆனால் நிறைய நண்பர்களும் விஜிபியின் வாடிக்கை யாளர்களும் இருந்தனர்.

ஒரு வாடிக்கை யாளர் தன் கடையை மூடி விட்டார். நான் ஆறு மாதத்தில் ரூ.8000 தர வேண்டும் என்ற நிபந்தனை யுடன் எனக்குக் கடையைத் தர முன்வந்தார்.

விளம்பரப் பலகை

பணத்தை மிச்சப் படுத்த நான் மரப்பெட்டி யிலுள்ள மரக்கட்டையைக் கொண்டு என் கடைக்கு விளம்பரப் பலகை செய்தேன்.

விஜிபி-ன் திட்டத்தைப் பின்பற்றிய வசந்த்

விஜிபியில் ஒரு திட்டம் இருந்தது. அதாவது வாடிக்கை யாளர் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வருவார்.

பொருளின் பாதி விலையை அடைந்ததும் பொருள் வாடிக்கை யாளரிடம் விற்கப்படும்.

விஜிபி-ன் திட்டத்தைப் பின்பற்றிய வசந்த்


மீதி தொகையை யும் மாதாமாதம் தவணை முறையில் செலுத்துவார். அதே திட்டத்தை என் கடையிலும் நான் ஆரம்பித்தேன்.

விஜிபியில் என்னுடன் நட்பாகப் பழகிய அனைத்து வாடிக்கை யாளர்களை யும் சென்று சந்தித்தேன்.

மூலதனம்

தேனாம் பேட்டையைச் சேர்ந்த திருப் பக்தவச்சலம் அவர்கள் மனமுவந்து அளித்த ரூ 22 என் மூலதன மானது.

விற்பனை

எங்கள் நிறுவனத்தின் விற்பனை 900 (ரூ 900 பில்லியன் ) கோடியையும் தாண்டியது. 64 கிளைகளையும் சேர்த்து 1000 பேர் வேலை செய்கிறார்கள்.

எம்எல்ஏ - தொழில்

என் தொழிலுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமு மில்லை. பல ஆண்டு களுக்கு முன்பே நான் தொழிலதிபராக ஆகிவிட்டேன். 

22 ரூபாயிலிருந்து 900 கோடி 'வசந்த் அன் கோ' !


கடந்த பத்து வருடங் களுக்கு முன்பு தான் நான் எம் எல் ஏவாக ஆனேன் என்கிறார் வசந்தகுமார்.

இந்தியாவில் தொழில் செய்வது கசுலபமாக இருக்கிறதா?

இங்கு எதுவும் சுலபம் இல்லை. சின்னச் சின்ன விஷயங் களில் இருந்து ஒவ்வொ ன்றையும் படிப் படியாகத் திட்டமிட வேண்டும். 

ஏதேனும் தடைகளைச் சந்திக்க நேர்ந்தால், திசையை மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும்.

நீங்கள் முன்னேறிச் செல்ல செல்ல நிறைய அனுபவம் கிடைக்கும். அனுபவங்கள் தடைக் கற்களைச் சுலபமாய்த் தாண்ட உதவிப் புரியும்.

வசந்த் & கோவின் தனித்த அடையாளம் என்ன?

வசந்த் & கோ என்பது வீட்டு உபயோகப் பொருட்களை மாத தவணையில் விற்கும் நிறுவனம்.

பெரிய நிறுவனங் களான அசோக் லேலண்ட் போன்ற வற்றிற்குச் சாமான்கள் விநியோ கிக்கிறோம். 

அங்கு வேலை செய்யும் பணியாளர் களுக்கும் பொருட்கள் விற்பனை .செய்திருக் கின்றோம்.

நிதி நிறுவனங் களுடன் இணைந்து செயல்படுதல்

எங்களின் விற்பனைக்குப் பிந்திய சேவைகள் தரமாகவும் காலம் தவறாமலும் இருக்கும். நாங்கள் நிதி நிறுவன ங்களுடன் இணைந்து செயல் படுகிறோம். 

அந்நிறு வனங்கள் பணத்தை எங்களுக்குச் செலுத்தி விட்டு வாடிக்கை யாளர்களிடம் மாத தவணை முறையில் பெற்றுக் கொள்ளும்.

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி வர்த்தகத்தை நிச்சயமாக மேம்படுத்தும். எங்களுக்கு இப்போது தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவில் கடைகள் உள்ளது. 

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப் பட்டவுடன் இந்தியா முழுவதும் கிளைகள் துவங்குவோம்.

பொருட்கள் தயாரிக்கும் முயற்சி தோல்வி

நான் மிக்ஸி, மின்விசிறி மற்றும் மின் நிலைப்படுத்தி (ஸ்டெபிலைசர்) போன்ற பொருட் களின் தயாரிப்பை பத்து ஆண்டுகளாக முயற்சித்துப் பார்த்தேன். 

வாடிக்கை யாளர்கள் வசந்த் & கோவை ஒரு சில்லறை விற்பனை யகமாகவே கருதினர். எங்களை உற்பத்தி யாளர்களாக ஏற்றுக் கொள்ள வில்லை.

அவர்களுக்கு நன்கு பரிச்சயமான பிரபல தயாரிப்புக ளையே நாடினர்.

பத்து வருடங் களுக்குப் பிறகு உற்பத்தி முயற்சி தோல்வி என்பதை உணர்ந்து நிறுத்தி விட்டோம்.

இந்திய பொருட்கள் எப்படி வெளிநாட்டுப் பொருட் களுடன் போட்டி போடுகிறது?

வீடியோகானும், சாம்சங்கும் இந்தியாவி லேயே பொருட்களைத் தயாரிக் கின்றன. மற்றவை சீனாவில் தயாரிக் கின்றன. இந்திய பொருட்கள் எவ்வித த்திலும் சளைத்ததல்ல.

நீங்கள் ஏன் இறக்குமதி பொருட்களை விற்பதில்லை?

பொருட்களை இறக்குமதி செய்வது எளிதான காரியம் அல்ல. அதற்கு நிறைய நிறைய உழைப்பும்,


அனுமதிப் பத்திரம் மற்றும் தனிக் கணக்கும் வேண்டும். இத்தினை உழைப் புக்கான ஊதியம் குறைவு.

எப்படியும் உற்பத்தி யாளர்கள் வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப் போகிறார்கள்.

வாங்குவது மற்றும் விற்பது எளிதான செயல். அதனால் நான் அதையே கடைப் பிடிக்கிறேன்.

ஊரகப் பகுதிகளில் விற்பனை

ஊரகப் பகுதிகள் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை எங்களுக்கு அளிக்கிறது.

60 சதவீத பொருட் களை நாங்கள் ஊரகப் பகுதிகளிலும் 40 சதவீதப் பொருட்களை நகரங் களிலும் விற்பனை செய்கிறோம்.

விற்பனைக்குப் பிந்தைய சேவை

சிறந்த விற்பனை க்குப் பிந்தைய சேவை அளிப்பதே மிகப்பெரும் சவாலாகும்.

100 இணைப்புகள் கொண்ட உதவி எண் சேவை உள்ளதால் யாவரும் எப்போது வேண்டு மானாலும் தொடர்புக்கு அழைக்கலாம்.

22 ரூபாயிலிருந்து 900 கோடி 'வசந்த் அன் கோ' !

உற்பத்தி யாளர் களுடன் ஒருங் கிணைந்து வாடிக்கை யாளர்களின் குறைகள் உடனுக் குடன் விரைவாகத் தீர்க்கப் பட்டதை உறுதி செய்து கொள்கிறோம்.

இதற்காகவே தனியாகத் தகவல் அழைப்பு மையம் செயல் படுகிறது.

பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் கீழ் தொழில் துறையை எப்படி ஒப்பிடு வீர்கள்?

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொழில் புரிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் பிஜேபி அரசாங்கம் தொடர்ந்து வரிகளை உயர்த்திக் கொண்டே போவது மட்டுமே ஒரே ஒரு நஷ்டம் விளைவிக்கும் பிரச்சனை யாக உள்ளது.

அவர்கள் சேவை வரியை உயர்த் தினார்கள். அதனால் அதன் சுமையை நாங்கள் வாடிக்கை யார்களிடம் வசூலிக்க வேண்டியி ருக்கிறது.

இதன் மூலம் பொருட்களின் விலை உயர்ந்து விற்பனை சரிகிறது. மக்கள் நலனுக்காகவே வரிகள் விதிக்கப் படுகிறது என்பதை நானறிவேன்.

ஆனால் அரசாங்கம் அயல் நாட்டுப் பயணங் களுக்கு உபயோப் படுத்துவதை விடுத்து நல்ல திட்டங் களுக்கு உபயோகப் படுத்த வேண்டும்.

அவர்கள் உள் நாட்டிலேயே பயணம் மேற் கொண்டு ஒரு சாதாரண மனிதனின் பிரச்சனை களைப் புரிந்து கொண்டு அடிப்படை வசதிகளைச் செய்து தரவேண்டும்.

அணு உலைகளுக்கு எரிபொருள் தேடுவதை விடுத்து, குடிமக் களுக்குத் தண்ணீர் தர ஆவணச் செய்ய வேண்டும்.

புதிய பட்டதாரி களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

நேர்மையான மனிதன் கிடைத்தால் என்னால் நன்றாகப் பயிற்று விக்க முடியும்.

துரதிஷ்ட மாக நம் பட்டதாரிகள் அடிப்படை திறமைகள் இல்லாத தால் வேலை யில்லாதவர் களாக இருக்கிறார்கள்.

பள்ளிக் கல்வி சிறந்ததாக அமைந்தால் மட்டுமே வேலை வாய்ப்பும் பெற முடியும்.

நீங்கள் மிதிவண்டி சரியாக ஓட்டக் கற்றுக் கொண்டால் மட்டுமே மோட்டார் வண்டி சரியாக ஓட்ட இயலும்.

நமது கல்வி முறை தரம் குறைந்த நிலையில் உள்ளது. அதன் அமைப்பை மேம்படுத்தும் எந்த முயற் சியையும் அவர்கள் எடுப்பதில்லை.


அனைத்து மாணாக் கர்களும் 8ஆம் வகுப்பு வரை வகுப்பு உயர்வு பெற வேண்டும் என்னும் நகைப்புக் குரிய விதிகளை நாம் வைத்துள்ளோம்.

பெரும் பாலான மாணாக்கர்கள் 9ஆம் வகுப்பு வரை கல்வி அற்றவர் களாகவும், அதற்குப் பிறகு சரியாகப் படிக்க முடியாத வர்களாகவும் ஆகின் றனர்.
 
அவர்கள் மேலும் அனைத்து மாணாக்கர் களையும் 10ஆம் வகுப்பு வரையும் உயர்வு கொடுத்து மேலும் 12ஆம் வகுப்பு வரையும் உயர்வு கொடுக்கச் சொல்வார்கள். 

இதன் பலன் பள்ளிகளிலிருந்து கல்லூரிகளி லிருந்தும் முட்டாள் களாக மட்டுமே வெளி வருவார்கள்.

இந்நிலை தொடர்ந்தால் நாம் அழிவைத் தரும் நிலைக்குத் தள்ளும் தாக்கங் களை ஏற்படுத்தும்.

நம் குழந்தை களுக்கு ஆரம்பபள்ளி முதலே தரமான கல்வி கொடுக்கப்பட வேண்டும். 

இதன் மூலம் அறிவுத் திறனுடன் திறமை வாய்ந்த பெரும் பான்மையான மாணவர்கள் கல்லூரிக ளிலிருந்து வெளி வருவார்கள்.

வசந்த் & கோவின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

சரக்கு மற்றும் சேவை வரி நடை முறைப் படுத்தப் பட்ட வுடன் எங்களின் அடிச்சு வட்டை விஸ்தரிப்போம். 

வசந்த் & கோவின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?


சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நடை முறைப்ப டுத்த காங்கிரஸ் கட்சி திட்ட மிட்டது. ஆனால் பாஜக அன்று எதிர்த்தது.

ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி 27% என்பது மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் எதிர்க்கிறோம். அரசாங்கம் 20% ஆகக் குறைக்க வேண்டும் எனக் கேட்கிறோம்.
Tags:
Privacy and cookie settings