இளைஞனின் சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி.. யார் இவர்?

நாம் தினமும் சூரியனைப் பார்த்து விழிக்கும் பழக்கம் மாறி தற்போது பேஸ்புக் முகத்தில் விழிக்கின்ற நிலைக்குத் தளப்பட்டுள்ளோம். 
இளைஞனின் சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி.. யார் இவர்?
இதனை மாறிக் கொள்ளப் பலர் பல முயற்சி செய்தாலும் கடைசியில் தோல்வியைக் கண்டவர்களே அதிகம்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான வாட்ஸ்அப்-க்கு உலகளவில் கடுமையான போட்டி அளிக்கும் நிறுவனம் தான் ஸ்னாப்சாட்.

சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் வந்த அப்டேட் கூட ஸ்னாப்சாடில் இருப்பதைப் போலவே இருந்தது. இத்தகைய பெரும் நிறுவனத்தின் தலைவர் தான் ஈவன் ஸ்பீஜெல்.

பங்குச் சந்தையில் ஸ்னாப்சாட்

பல முக்கிய ஆலோசனை களுக்கு அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங் களில் ஒன்றாக இருக்கும் ஸ்னாப்சாட் பங்குச் சந்தையில் இறங்க முடிவு செய்தது. 

இதன் படி 2017ஆம் ஆண்டில் நியூயார்க் பங்குச் சந்தையில் முதன் முதலாகப் பட்டியலி டப்படும் ஸ்னாப்சாட் என்பதால் முதலீட் டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத் துள்ளது.
அறிமுக விலை

ஸ்னாப்சாட் செயலியின் ஆஸ்தான நிறுவன மான ஸ்னாப் இன்க் நியூயார்க் பங்குச் சந்தையில் ஐபிஓ-வில் பட்டியலிடப்படும் நிலையில்,

ஒரு பங்கின் விலை 17 டாலர் என்ற அடிப்படையில் இந்நிறுவன த்தின் மதிப்பு 23.8 பில்லியன் டாலர் வரை மதிப்பிடப் பட்டுள்ளது.

விற்பனை

அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட ஸ்னாப் நிறுவனத்தின் 200 மில்லியன் பங்குகள் 17 டாலருக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது. 

இதில் பெரும் பாலான பங்குகள் மியூச்சுவல் பண்ட் நிறுவனங் களால் நீண்ட கால முதலீட்டு நோக்கில் பெற்றுள்ளது.

ஈவன் ஸ்பீஜெல்

சந்தையில் இந்நிறுவனத்திற்குக் கிடைத்ததை மிகப்பெரிய வரவேற் பினால் இந்நிறுவனத்தின் நிறுவனர்களான ஈவன் ஸ்பீஜெல் மற்றும் முர்பி அவர்களின் மதிப்பு 
இளைஞனின் சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி.. யார் இவர்?
கணிப்புகளை விடவும் 1.7 பில்லியன் டாலர் அதிகமாகப் பெற்றனர். இன்றைய நிலையில் ஈவன் ஸ்பீஜெல்-இன் மொத்த சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர்.

சரியான தேர்வு..

இன்றைய நிலை வரை ஸ்னாப்சாட் லாபம் பெற வில்லை என்றாலும் தொடர்ந்து வர்த்தகமும், வருவாயும் அதிகரித்து வருகிறது. 

மேலும் தற்போதைய சந்தை நிலையை வைத்துப் பார்க்கும் போது 2020ஆம் ஆண்டு வரையில் இந்நிறுவனத்திற்குப் பெரிய அளவிலான நஷ்டம் இருக்காது என அமெரிக்கப் பங்குச்சந்தை வல்லுனர்கள் தெரிவித் துள்ளனர். 

இதன் மூலம் ஸ்னாப்சாட் நிறுவனம் சரியான நேரத்தில் பங்குச் சந்தையில் குதித்துள்ளது என அனைத்துப் பிரிவினர்களும் பாராட்டி வருகின்றனர்.

பேஸ்புக்
பங்குச் சந்தையில் ஸ்னாப்சாட் பட்டியலிடப் பட்டுள்ள தால், பேஸ்புக் நிறுவன த்திற்கு எந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்படும் என ஆராய்ந்த போது. 

சந்தை வல்லுனர்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது எனத் தெரிவித் துள்ளனர்.

26 வயது

4.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய ஈவன் ஸ்பீஜெல்-இன் வயது 26 என்று நினைக்கும் போதும் ஆச்சரியமாக இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings