2017-ம் ஆண்டுக்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் 2043 பணக் காரர்களின் பெயர்களைப் பட்டியலிட் டுள்ளது. இவர்களின் கடந்த ஆண்டு சொத்து மதிப்பை விட 18% அதிகமாகும்.
உலகப் பணக்காரர் களில் 86 பில்லியன் டாலர் சொத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு 27.6 பில்லியன் டாலர் சொத்துடன் 5-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ், இந்த ஆண்டு 72.8 பில்லியன் டாலர் சொத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 101 இந்தியர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. முதல் முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
முகேஷ் அம்பானி 23.2 பில்லியன் டாலர் சொத்துடன் உலக அளவில் 33-வது பணக் காரராக உள்ளார். இவரது இளைய சகோதரர் அனில் அம்பானி, 745-வது இடத்தைப் பிடித் துள்ளார்.
உலகில் அதிகமான பணக்காரர் களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 101 பணக்காரர் களுடன் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.