ஏப்ரல் 1-ம் தேதி முதல் பி.எஸ் 3 (BS-III) விதிமுறைகளுக்கு மட்டுமே பொருந்தும் வாகனங்களை புதிதாக வாங்க தடை விதித்து உத்தர விட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனால் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக வாங்கிய வாகனங்களை மட்டுமே நாளை முதல் பதிவு செய்ய முடியும். அதே போல வாகன உற்பத்தி நிறுவனங்களும் இனி பி.எஸ் 4 (BS-IV) வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யவும், தயாரிக்கவும் முடியும்.
இதனால் இன்று பி.எஸ் 3 ரக இன்ஜின் வாகனங் களை விற்பதற் காக பல்வேறு நிறுவனங் களும் அதிகளவில் தள்ளுபடி அறிவிப்பு களை வெளி யிட்டுள்ளன.
மேலும் நாளை முதல் விற்பனை செய்ய முடியாது என்பதால், தேக்க மடைந் துள்ள பி.எஸ். 3 வாகனங் களால் கலக்க மடைந் துள்ளன வாகன உற்பத்தி நிறுவனங்கள்.
பி எஸ் 4 வாகனங்கள்
சில நிறுவனங்கள் இந்த வாகனங் களை ஏற்றுமதி செய்ய முடிவெடுத் துள்ளதாக தெரிகிறது. இது அதிர்ச்சி கரமான முடிவாக இருந்தாலும் கூட, சுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் இது வரவேற்கத் தகுந்த முடிவே!
ஆம். தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு, சிறிய தீர்வு அளிக்கும் வகையில் அமைந் துள்ளது இந்த தீர்ப்பு.
இது மட்டு மில்லாமல் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல், இந்தியா நேரடியாக பி.எஸ் 6 விதிமுறை களுக்கு மாற விருக்கிறது என கடந்த ஆண்டே அறிவித்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
இதன் மூலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் பி.எஸ் 4 விதிமுறை களுக்கு ஏற்ப எரிபொருளின் தரமும் உயருகிறது.
இதன் மூலம் தற்போது அமலாக இருக்கும் பி.எஸ் 4 விதிமுறை களுக்கு அடுத்து, பி.எஸ் 5 விதிமுறை களுக்கு மாறாமல், நேரடியாக இந்தியா பி.எஸ் 6 விதிமுறை களுக்கு மாறுவது உறுதியாகி யுள்ளது.
இதன் மூலம் வாகனங் களில் இருந்து வெளியாகும் மாசின் அளவு இன்னும் குறையும். இது பற்றி நம்மிடம் பேசிய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், பாரத் ஸ்டேஜ் எனப்படும் இந்த பி.எஸ் தரக்கட்டுப் பாடுகள்,
வாகனங் களில் இருந்து வெளியேறும் மாசின் அளவைக் கட்டுப் படுத்தும் அளவுகள் தான். பி.எஸ் 1 என்ற அளவில் இருந்து தற்போது பி.எஸ் 4 அளவிற்கு முன்னேறி யுள்ளோம்.
இவற்றிற்கு இடையே எந்த அளவிற்கு மாசுகளின் அளவு குறைந்துள்ளது என்ற விவரங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணைய தளத்திலேயே கிடைக்கிறது.
பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள்
தற்போது இந்த பி.எஸ் 4 விதி முறைகள் மூலம் நிச்சயம் காற்று மாசின் அளவு குறையும். ஆனால் இவற்றின் தாக்கம் உடனே தெரியாது. புதிய வாகனங்களின் எண்ணிக்கை சாலையில் அதிகமானால் தான் இவற்றால் எந்த அளவு காற்றுமாசு குறைந்துள்ளது எனத் தெரியும்.
வாகனங்களில் பி.எஸ் 4 விதிமுறைகளுக்கு ஏற்ப இதற்காக மாறுதல்கள் செய்யப்படும். இதனால் வாகனங்களின் எரிபொருள் திறன் அதிகரிக்கும்; வாகனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் குறையும்.
இதனால் ஹைட்ரோ கார்பன்ஸ், கார்பன் மோனாக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் PM துகள்கள் அனைத்தின் அளவும் குறையும்.
இவை குறைந்தாலே வாகனங் களால் ஏற்படும் மாசின் அளவு குறைந்து விடும். தற்போது இதற்கான தொழில் நுட்பங்கள், எரிபொருள் சுத்தகரிப்பு முறைகள் அனைத்தும் நம்மிடம் இருக் கின்றன.
பி.எஸ் விதிமுறைகள் வருவதற்கு முன்பாக எரிபொருளில் இருந்த சல்பரின் அளவு 10,000 Ppm அளவு இருந்தது.
இதனால் வாகனங்களில் இருந்து வெளியேறும் சல்பரின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் பி.எஸ் 3-ல் சல்பரின் அளவு 350 ppm- தான் இருக்கும். இதற்கு காரணம் எரிபொருள் சுத்தகரிக்கும் தொழில் நுட்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தான்.
இந்த சல்பர் தான் சல்பர் டை ஆக்சைடாக மாறி காற்றில் கலக்கும். சல்பேட் துகள்காக காற்றில் மிதக்கும். இதனால் நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்னை களும் ஏற்படும்.
ஏற்கெனவே பி.எஸ் 4 நான்கு சக்கர வாகனங்களை சென்னையில் பதிவு செய்ய முடியாது. இதற்கான தடை 2010-ம் ஆண்டில் இருந்தே, மெட்ரோ நகரங்களில் இருக்கிறது.
தற்போது இருசக்கர வாகனங்களுக்கும் இந்த உத்தரவு வந்துள்ளது. பேருந்து, லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், கார்கள் எனப் பல வாகனங்கள் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றன.
உதாரண மாக கார் வைத்திருக்கும் ஒருவர், கார் இல்லாத ஒருவர் சுவாசிக்கும் காற்றையும் சேர்த்து மாசுபடுத்துகிறார். ஒருவரின் வாகனத்தால், பலரது உடல்நலம் கெடுகிறது. இது போன்ற விஷயங்கள் குறைய வேண்டும் என்றனர்.
காற்று மாசுபாடு
இந்த விதி முறையால் வாகன எரிபொருளில் எந்த அளவிற்கு மாறுதல்கள் ஏற்படும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் தலைவர் முரளியிடம் கேட்டோம்.
ஏற்கெனவே மெட்ரோ நகரங்களில் முதல் பி.எஸ் 4 எரிபொருள்கள் தான் விநியோகம் செய்யப் படுகின்றன.
மற்ற நகரங்களில் மட்டும் தான் பி.எஸ் 3 எரிபொருள் விநியோகம் இருந்தது. தற்போது உச்சநீதிமன்றம் ஏப்ரல் 1-ம் தேதி முதல், பி.எஸ் 4 எரிபொருளை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது.
பி.எஸ் 3 எரிபொருளில் 350 ppm அளவிற்கு இருக்கும் சல்பரின் அளவு, பி.எஸ் 4 எரிபொருளில் 50 ppm-க்கும் குறைவாகத் தான் இருக்கும்.
Me & my colleagues @PrakashJavdekar, Anant Geete, @dpradhanbjp hve taken a unanimous decision to leap-frog to BS VI directly from 01/04/2020— Nitin Gadkari (@nitin_gadkari) January 6, 2016
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதற்கு முன்னர் சென்னையில் இருப்ப வர்கள் மட்டும், பி.எஸ் 4 எரிபொருளைப் பயன்படுத்தி வந்தனர். அதே சமயம் அவர்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது, மீண்டும் பி.எஸ் 3 எரிபொருளைத் தான் பயன் படுத்துவர்.
ஆனால் தற்போது இந்தியா முழுவதும் பி.எஸ் 4 எரிபொருள் என்பதால், இந்தப் பிரச்னை இனி இருக்காது. ஏற்கெனவே ஆயில் நிறுவனங்கள் பி.எஸ் 3 எரிபொருளை கடந்த 20 நாட்களாக நிறுத்தி விட்டனர்.
தற்போது பி.எஸ் 4 எரிபொருள் தான் பயன் படுத்தப் படுகிறது. இது அதிகாரப் பூர்வமாக நாளை முதல் அமலுக்கு வருகிறது. அவ்வளவு தான்! பி.எஸ் 3 எரிபொருளை விடவும், பி.எஸ் 4 எரிபொருள் விலை அதிகமானது.
ஆனால் இதனால் பெட்ரோல், டீசல் விலை யேற்றம் வருமா என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.