புகையிலை, பான் மசாலாவை பொது இடங்களில் துப்பினால் அபராதம் !

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் அரசு அலுவலகங்களின் செயல்பாடு குறித்து பார்வையிட்ட யோகி,
புகையிலை, பான் மசாலாவை பொது இடங்களில் துப்பினால் அபராதம் !
தலைமை அலுவலகத்தின் சுவர்களில் பான் மசாலா, புகையிலை பயன்படுத்தி துப்பிய கறைகளை கண்டு முகம் சுளித்தார். இதை யடுத்து அவர் அலுவலக பணியின் போது பான், புகையிலையை பயன் படுத்த கூடாது. 

சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரி களுக்கு உத்தர விட்டார். 

யோகி அரசின் இந்த ஆலோசனையை தற்போது திரிவேந்திர சிங் ரவாத் தலைமையிலான பாஜ அரசு உத்தரகண்டில் கடுமையாக பின்பற்ற முடிவு செய்துள்ளது.

அதன்படி அரசு அலுவல கங்கள், பொது இடங்களில் பான் மசாலா, புகையிலை பயன் படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. 

உத்தரவை மீறினால் நவம்பரில் கொண்டு வரப்பட்ட புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ரூ.5000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து நகர மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதையை அரசு அனைத்து மாநகராட்சி களிலும் சுகாதாரத்தை மேம் படுத்துவது குறித்து அறிவுறுத்தி வருகிறது.

மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் கூட சுற்றுப்புற தூய்மையை நிலைநிறுத்த அறிவுறுத்தி யுள்ளது. 

பான், புகையிலை உள்ளிட்டவைகளால் சுற்றுப்புற சீர்கேடு உருவாக்கு வோர் மீது ரூ.5000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை வழங்க முடிவு செய்துள்ளது. 

அரசின் இந்த செயல் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings