உச்ச நீதிமன்றத்தில் பேப்பர்களை பயன் படுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு கணினி மயமாக்கப்படும் என தலைமை நீதிபதி ஹெகர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை கணினி மயமாக்கப் பட்டு வருகின்றன.
இதன் மூலம் பணிகள் விரைவாக முடிவதுடன், காகித பயன்பாடும் குறை கிறது. இந்நிலை யில், உச்ச நீதிமன்ற த்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெகர் தலைமை யிலான அமர்வு முன்பு விசாரணை க்கு வந்தது.
அப்போது நீதிபதி ஹெகர் கூறுகையில், உச்ச நீதிமன்ற த்தில் இன்னும் 6 முதல் 7 மாதங்க ளுக்குள் பேப்பர் பயன்பாடு நிறுத்தப்படும்.
விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற ங்களில் இருந்து மின்னணு பரிவர்த்தனை மூலம் ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்ற த்தில் தாக்கல் செய்யப் படும் மனுக்களும் மின்னனு வசதி மூலம் பெற வழிவகை செய்யப் படும் என்றார்.
உச்ச நீதிமன்றத் துக்கு ஆண்டு தோறும் சுமார் 70 ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்யப் படுகின்றன.
ஒவ்வொன்றும் குறைந்தது 100 பக்கங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் பக்கங்கள் கொண்ட வெள்ளை தாள்கள் பயன் படுத்தப் படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.