கடும் தண்ணீர் தட்டுப் பாட்டால் வரும் 2040 ம் ஆண்டு 4ல் 1குழந்தை பாதிக்கப்படும். உலகம் முழுவதும் 600 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தண்ணீர் தேவை குறித்து ஐ.நா சார்பில் ஒரு ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.
இந்த ஆய்வின் முடிவை யுனிசெப் அமைப்பு வெளியிட்டது. பருவநிலை மாறுபாடு காரண மாக வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உயரும்.
சுகாதார மற்ற குடிநீர் காரணமாக குழந்தைகளின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும்.
வரும் 2040ம் ஆண்டு உலகில் 4ல் 1குழந்தை தண்ணீர் தட்டுப் பட்டால் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று யுனிசெப் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் தெரிய வந்துள்ளது.
இது போன்ற மோசமான விளைவு களை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை களை மேற் கொள்ள வேண்டும் என்று யுனிசெப் இயக்குனர் அந்தோனி லேக் தெரிவித் துள்ளார்.
மக்கள் தொகை அதிகரிப்பு, தண்ணீர் தேவையின் மிகுதி ஆகியவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் காணப் படுகிறது. அது 36 நாடுகளில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப் பட்டுள்ளது.
தற்போது 663 மில்லியன் மக்கள் போதிய குடிநீர் இன்றி தவிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. 946 மில்லியன் மக்கள் திறந்த வெளி கழிப்பிடங் களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் தண்ணீர் மாசுபாடு காரணமாக ஏற்படும் நோயால், ஒவ்வொரு நாளும் 5 வயதுக்கு உட்பட்ட 800 குழந்தைகள் உயிரிழப்ப தாக குறிப்பிடப் பட்டுள்ளது.
யுனிசெப் தகவலின்படி, உலக அளவில் நாள் ஒன்றிற்கு 200 மில்லியன் மணி நேரம் பெண்கள் தண்ணீரை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய, பள்ளி செல்வதை விட தண்ணீர் சேகரிப்பிற்கு குழந்தைகள் அதிக நேரம் செலவிடு கின்றனர்.