மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு... ஒருவர் தற்கொலை முயற்சி?

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறைபிடித்துச் சென்றனர். 
மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு... ஒருவர் தற்கொலை முயற்சி?
இதில், விசாரணை யின் போது ஒரு மீனவர் பாட்டில் துகள்களை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற தாகக் கூறப் படுகிறது.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த ராசு மகன் பாபு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அதே ஊரைச் சேர்ந்த சிற்றம்பலம் மகன் சந்தோஷ் (30), 

ராமசாமி மகன் சிங்காரம் (28), கண்ணன் மகன் சதன் (25), குட்டியாண்டி மகன் பாலு (47), ராஜகோபால் மகன் விஸ்வா (40), கண்ணன் மகன் சரத் (33), வடிவேல் மகன் ஆறுமுகம் (35), 

சண்முகம் மகன் சந்தோஷ் (28) ஆகிய 8 பேர் கடந்த 1-ம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத் திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.

கோடியக் கரைக்கு தென் கிழக்கே இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் நேற்று முன்தினம் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, 
அங்கு வந்த இலங்கை கடற் படையினர், 8 மீனவர் களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். 

அவர்களது படகும் பறிமுதல் செய்யப் பட்டது. திரிகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப் பட்ட மீனவ ர்களிடம் விசாரணை நடை பெற்று வந்த நிலையில், 

அச்சம் காரணமாக சந்தோஷ் என்ற மீனவர் பாட்டிலை உடைத்து கையை அறுத்துக் கொண்டதுடன், பாட்டில் துகள் களையும் விழுங்கியுள்ளார். 

இதை யடுத்து, அவர் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். மற்ற 7 பேரும், விசாரணை க்குப் பிறகு ஊர்க்காவல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் எனத் தெரிகிறது.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல் லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற் படையினர் அடித்து விரட்டுவதும், வலைகளை யும், மீன்களையும் பறித்துக் கொள்வதும், 

சிறை பிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இவற்றை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்வதாகவும், 

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings