நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர் களை ஆலோச னைக்கு அழைப்பு விடுத் துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தமது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கக் கூடும்
என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலை தளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தமது கருத்துகளை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கமல்ஹாசனின் ரசிகர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையி லடைத்தனர்.
இதற்கும் கண்டனம் தெரிவித் திருந்தார் கமல். அண்மைக் காலமாக கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் தமக்கு அரசியல் சரிப்பட்டு வராது என கமல் தொடர்ந்து கூறி வருகிறார். அத்துடன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை தாம் எதிர்ப்ப தாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று திடீரென தமது ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞ ர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பாரா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது.