நீண்ட பரிசீலனைக்கு பின் டி.டி.வி. தினகரன் வேட்புமனு ஏற்பு !

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிட, டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த வேட்புமனு நீண்ட பரிசீலனை க்கு பிறகு ஏற்கப்பட்டுள்ளது. 
நீண்ட பரிசீலனைக்கு பின் டி.டி.வி. தினகரன் வேட்புமனு ஏற்பு !
தினகரன் தரப்பு அளித்த விளக்கத்தை அடுத்து தினகரனின் மனு ஏற்கப்பட்டது. திமுக தரப்பினர் டி.டி.வி. தினகரனின் மனுவை ஏற்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 

டி.டி.வி.தினகரனின் மனுவை ஏற்க திமுக வேட்பாளர் மருது கணேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். 

தினகரனின் மீது அந்நிய செவலாணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப் பட்டவர் என்பதால் அவரது மனுவை நிராகரிக்கு மாறு திமுக சார்பில் கோரப்பட்டது. 

மேலும் தினகரனின் வேட்பு மனுவை ஏற்பதற்கு பன்னீர் அணியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தினகரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருப்பதால் அவரது வேட்பு மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவித்தனர். 
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக திமுக மற்றும் தினகரன் தரப்பு வாதங்களால் வேட்பு மனுவை ஏற்பதிர் தாமதம் ஏற்பட்டது. 

இறுதியாக திமுகவின் கோரிக்கை மற்றும் வாதத்தை நிராகரித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்றனர்.

தீபா வேட்பு மனு ஏற்பு:

ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா வேட்பு மனு ஏற்கபட்டுள்ளது. வேட்பு மனுவில் கணவர் பெயர் குறிப்பிடாததால் மனு ஏற்கபடுமா என்ற ஐயம் ஏற்பட்டிருந்தது. 
ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 85 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings