தமிழகம் முழுவதும் வருகிற 1–ந்தேதி முதல் தற்போது உள்ள ரேஷன் கார்டுக ளுக்கு பதிலாக ‘ஸ்மார்ட் கார்டு’ என்கிற புதிய ரேஷன் கார்டு வழங்கப் படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.
இந்த அறிவிப்பின் படி ரேஷன் கார்டுதாரர் களிடம் ஏற்கனவே அந்தந்த நியாய விலைக் கடைகளின் மூலம் பெறப்பட்ட தகவல்கள்
மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படை யில் ஸ்மார்ட் கார்டுகளை தயாரிக்கும் பணியானது தீவிர மாக நடந்து வருகிறது.
புதிதாக வழங்கப்பட இருக்கும் ஸ்மார்ட் கார்டு ‘பான்’ கார்டு வடிவில் இருக்கும்.
இதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில் அரசு முத்திரை யுடன் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை என்ற எழுத்துக் களும்,
அதற்கு கீழ் குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம் தனி குறியீட்டு எண் முகவரி போன்ற வையும், பின்புறத்தில் குடும்ப உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு
மற்றும் கியூ. ஆர் என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில் இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக்கூடாது என எழுதப்பட்டு இருக்கும்.

ஐந்து வகை
இந்த ஸ்மார்ட் கார்டுகள் ஐந்து வகைகளாக வெளியிடப்பட இருக்கிறது.
கார்டில் புகைப்படம் அருகில்....
பி.எச்.எச்.– ரைஸ் என்றிருந்தால் அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
பி. எச்.எச். – ஏ என்றிருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்து பொருட்களும் தரப்படும்.
என்.பி.எச்.எச். என மட்டும் இருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
என்.பி.எச். எச். –எஸ் என இருந்தால் சர்க்கரை மட்டும் வழங்கப்படும்.
என்.பி.எச்.எச்.– என்.சி. என்றிருந்தால் எந்த பொருட்களும் வழங்கப்பட மாட்டாது.