இன்றைய நவீன வானியல் அலகுகள்.. படியுங்கள் !

இன்றைய நவீன வானியல். வானியல் என்பது பல துறைகளை உள்ளடக்கிய ஒன்று. நமது பிரபஞ்சம் என்பது நம்மால் உருவகிக்க முடியாத ஒன்று. எனவே பூமியில் நாம் தூரத்தை அளக்க 

இன்றைய நவீன வானியல் அலகுகள்.. படியுங்கள் !
உபயோகிக்கும் நம்முடைய சாதாரண அளவீடான கிலோ மீட்டர் எல்லாம் கதைக் குதவாது. எனவே சில வகை அடிப்படை வானியல் அளவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

AU (Astronomical Units) வானியல் அலகு

சூரியக் குடும்பத்திற்கு உள்ளே உள்ள கிரகங்களுக்கு இடையேயான தொலைவைக் குறிக்க இவை உபயோகப் படுத்தப் படுகிறது. 

ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமியின் வட்டப் பாதைக்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும். 

சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளான (?) ப்ளூட்டோ சூரியனிலிருந்து 39.47 AU தொலைவில் உள்ளது. சுருங்கச் சொன்னால் ஒரு AU என்பது 14,95,97,871 கிலோ மீட்டர்கள்.
ஒளிவருடம் (Light Year)

ரெம்பத் தொலைவில் உள்ளதை அளக்க கிலோ மீட்டரோ அல்லது AU -வோ கதைக்கு உதவாது. அதை ஒளியின் வேகத்தோடு அளக்கி ன்றனர். ஒளியானது 2,99,792.458 கிலோ மீட்டர் தொலைவை ஒரு வினாடியில் கடந்து செல்லும். 

இந்த ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவை ஓர் ஒளி வருடம் எனக் குறிப்பிடு கின்றனர். வினாடிக்கு சராசரியாக மூன்று இலட்சம் கிலோ மீட்டர்கள். 

இன்றைய நவீன வானியல் அலகுகள்.. படியுங்கள் !
சூரிய ஒளி நம்மை வந்து அடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு 8.3 நிமிடங்கள். காலையில் மலை யிடுக்கில் நீங்கள் பார்க்கும் சூரியன் நீங்கள் பார்க்கும் அதே நேரத்தில் அந்த இடத்தில் இல்லை. 

நீங்கள் பார்ப்பது 8.3 நிமிடங் களுக்கு முன்னர் இருந்த சூரியனை. நமக்கு மிக அருகில் (!) இருக்கும் நட்சத்திர மான ''ப்ராக்ஸிமா செஞ்சுரி'' -க்கும் நமக்கு மான தொலைவு 4.2 ஒளி வருடங்கள். 

இவ்வளவு ஏன் ஒரு ஒளி வருடம் என்பது 94,60,52,84,00,000 கிலோ மீட்டர்கள். அதாவது ஓர் ஒளி ஆண்டு = 9.43 லட்சம் கோடி கிலோ மீட்டர்.

பார்செக்

3.26 ஒளி வருடங்கள் ஒரு பார்செக். அதாவது 206,264 முறை பூமியிலிருந்து சூரியனின் தூரத்திற்கு சமமான ஒரு நீள அலகாகும். 

இரண்டு அண்டங்களுக்கு இடையேயான தொலைவை கிலோ பார்செக் அலகால் விஞ்ஞானிகள் குறிபிடு கின்றனர். 

இன்றைய நவீன வானியல் அலகுகள்.. படியுங்கள் !
1000 பார்செக் = 1 கிலோ பார்செக். இதன் தொலைவு 3.262 ஒளி வருடங்கள். வினாடிக்கு 3 இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் 3.262 வருடங் களில் ஒரு பார்செக் தொலைவைக் கடந்து விடலாம்.

மேலும் மெகா பார்செக், கிகா பார்செக் உள்ளிட்ட அளவுகளும் புழக்கத்தில் உள்ளன.

கிலோ பார்செக் – 1,000 பார்செக்

மெகா பார்செக் – 1,000,000 பார்செக்

கிகா பார்செக் – 1,000,000,000 பார்செக்

குறிப்பு:-
மைக்கேல்சன் - மார்லி சோதனையில் தான் ஒளியின் வேகம் 2,99,792.458 கிலோ மீட்டர்கள் என துல்லியமாக அளவிடப் பட்டது. 

ஐன்ஸ்டீன் ஒளியின் வேகம் மாறுபடும் என்று சொன்னார். அவ்வாறு மாறும் போது பொருளின் அளவிலும் மாறுதல் ஏற்படும். காலமும் மாறும் என்றார்.
Tags:
Privacy and cookie settings