அரபு நாடுகளில் ஒன்றான பக்ரைனில் ஊதியம் கிடைக்காததால் இந்திய தொழி லாளர்கள் 500 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். பக்ரைனில் உள்ள எண்ணெய் கம்பெனிகளில் பல்வேறு வேலை களுக்காக சென்ற அவர்க ளுக்கு,
கடந்த சில மாதங் களாக ஆலை நிர்வாகத்தினர் ஊதியம் சரிவர வழங்க வில்லை. இதனால் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்கமாமல் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
உதவி கேட்டு பாதிக்கப் பட்ட தொழிலா ளர்கள் சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்த தால், இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்தது.
இந்த தகவலை அறிந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஊதிய மின்றி துயரப்படும் இந்திய தொழிலாளர் களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும்படி ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத் திற்கு உத்தர விட்டுள்ளார்.
தொழிலா ளர்கள் விவகாரம் பக்ரைன் அரசின் கவனத் திற்கு கொண்டு செல்லப் பட்டு, பிரச்சனை க்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ள தாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட் டுள்ளது.
அரபு நாடு களுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஊதியம் இன்மை, அதிக பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு துயரங் களுக்கு ஆளாவது வாடிக்கை யாகி உள்ளது.
கடந்த ஆண்டு சவுதி அரேபியா வில் இதே போன்று சிக்கி தவித்த சுமார் 88 தொழி லாளர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டது குறிப்பிடத் தக்கது.