வங்கிக் கணக்கில் இருந்து 4 முறை இலவச பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ ரூ.150 கட்டணம் வசூலிக்கப் படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன,
நம்முடைய பணத்தை போடவோ, எடுக்கவோ கூட பணம் கொடுக்க வேண்டியி ருக்கிறது. இந்த பணத்தை வங்கிகள் எப்படி வசூலிக்கி றார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாடு முழுவதும் கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்பு களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
வங்கிகளில் இருந்தும், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கவும் குறைந்த பட்ச உச்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. தற்போது படிப்படி யாக நீக்கப் பட்டிருந்தது.
உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கை யினால் பாதிக்கப்பட்டு தற்போது தான் மூச்சுவிடத் தொடங்கிய மக்களுக்கு இடியாக இறங்கியுள்ளது தனியார் வங்கிகளின் புதிய அறிவிப்பு.