தந்தை - மகள் உறவில் இருக்க வேண்டிவை !

1 minute read
ஒரு பெண்ணின் தந்தை அவள் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கின்றார். அவளுடைய குழந்தை பருவத்திலிருந்து டீன் ஏஜ் பருவம் வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்து வருபவர் தந்தை. 
 

ஒரு தாயை போல் தந்தைக்கும் பல கடமைகள் உள்ளன. அவளின் வாழ்க்கைக்கு அவரே நம்பிக்கை யையும், பாதுகாப்பையும் அளிக்கின்றார். 

பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், தந்தையும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றார். பெண் குழந்தை பிறந்த உடனேயே தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின்றன.
குழந்தைகளுக்கு வசம்பு அணிவிப்பதன் அவசியம் என்ன?
அவளுடைய பள்ளி முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தேர்ந்தெடுப்பதை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பர் தந்தை.

அது மட்டுமின்றி தனது மகளின் வாழ்வில் ஒரு தந்தை யானவர் செல்வாக்கையும், சுய மரியாதை யையும், நம்பிக்கை யையும் கொடுக்கின்றார்.

இப்போது ஆரோக்கியமான அப்பா -மகள் உறவை பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம்... 

• மகளை தோழியாக கருதி, உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக மகளுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து கேளுங்கள்.

• உங்கள் மகளுக்கு எதுவும் தெரியாது என்று எண்ண வேண்டாம். குழந்தைகள் இந்த நாட்களில் மிகவும் தெளிவாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்திக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். 

• உங்கள் மகளுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையில் வரும் பிரச்சனைக

ளை தீர்த்து வையுங்கள். இரண்டு பெண்களின் பிரச்சனைகளை தீர்க்க ஒரு ஆண் இருந்தால், பிரச்சனை தீர வாய்ப்பு உண்டு. 
• நீங்கள் நன்றாக பேச அல்லது உணர்ச்சியை காட்ட முடியாத நபராக இருந்தால், குழந்தைகளுக்கு சில சில உதவிகளை செய்ய பழகுங்கள்.

அதாவது ஷாப்பிங் அழைத்துச் செல்வது, வீட்டு பாடத்தில் உதவுவது போன்ற உதவிகளை செய்யுங்கள். 

• பெண்களை பாதுகாக்கின்றோம் என்று கருதி தந்தைமார்கள் சில நேரங் களில் தொந்தரவு கொடுப்பது உண்டு.

இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது சந்தேகம் கொள்ள தூண்டும். இது கண்டிப்பாக உங்கள் மகளை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

• அவர்கள் இனி குழந்தைகள் இல்லை, அவர்களால் சிந்திக்கவும் செயல் படவும் முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பனிக்குடத்தில் தண்ணீர் இருந்தும் எப்படி குழந்தை உயிர் வாழ்கிறது?
அதிலும் செய்யும் தவறுகளில் இருந்து கற்று கொள்ளட்டும். எப்பொழுதும் அவர்கள் பின்னால் நின்று போதனை செய்வதை நிறுத்துங்கள். 
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings