நாளை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் உயர்கிறது!’ - இப்படி செய்தி வந்தாலே போதும். மறுநாள் உலகமே அழியப் போவது போல், முந்தைய நாளே பெட்ரோல் பங்க்குகளில்,
‘டேங்க்கை ஃபுல் பண்ணிடுப்பா’ என்று கூட்டம் அள்ளும். 1 ரூபாய் பெட்ரோல் விலை உயர்வுக்கே இப்படி என்றால், பைக்குகளுக்கே டிஸ்கவுன்ட் கிடைக்கிறது என்றால் சும்மாவா?
மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின் படி BS3 நார்ம்ஸ் கொண்ட வாகனங் களுக்குத் தடை; 31-ம் தேதிக்குப் பிறகு எந்த புக்கிங்கும் இருக்கக் கூடாது!
என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது தான் தாமதம்... டிஸ்கவுன்ட் விஷயத்தில் கிள்ளிக் கூடக் குடுக்காத ஷோரூம் டீலர்கள், அள்ளிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
நிஜமாகவே பைக்கு களுக்கும் ஸ்கூட்டர் களுக்கும் வரலாறு காணாத அளவில் விலைக் குறைப்பு செய்யப் பட்டது.
எப்படி என்றால், 60,000 விலை கொண்ட 100 சிசி பைக்கு களுக்கு 8,000 ரூபாயில் ஆரம்பித்து... 200 சிசி பைக்குகளுக்கு 20,000 ரூபாய் வரை தள்ளுபடியை அறிவித்து வாடிக்கை யாளர்கள் மத்தியில் ஆசையைத் தூண்டி விட்டன பைக் நிறுவனங்கள்.
இதில் உச்ச பட்சமாக 650 சிசி பைக்கு களுக்கு 1.5 லட்சம் வரை விலைக் குறைப் பெல்லாம் செய்தார்கள்.
காரணம், இந்தத் தடையின்படி, பைக்குகள் மட்டும் 8.24 லட்சம் எண்ணிக்கை யில் வெட்ட வெளியில் காற்று வாங்கக் காத்திருந்தன.
இதனால், கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடையக் காத்திருந்த நிறுவனங்கள், தடாலென அந்த அதிரடியில் இறங்கின. டிவிஎஸ் 25% வரை விலைக் குறைப்பு;
ஹீரோவில் 20% விலைக் குறைப்பு; ஹோண்டா தான் இதில் லீடிங். 82,000 ரூபாய் விலை கொண்ட யூனிகார்ன் 150 சிசி பைக்கை, 60,000 ரூபாய்க்குத் தரக் காத்தி ருப்பதாக விளம் பரங்கள் வந்தது தான் தாமதம்...
தமிழ்நாட்டில்... இல்லை... இந்தியாவில் உள்ள மொத்த ஹோண்டா ஷோரூம்களிலும் தள்ளுமுள்ளு அள்ளு கிளப்பியது.
இன்று தான் கடைசி என்பதால், டிராஃபிக் போலீஸ் வந்து நிலைமையைக் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அலை மோதியது கூட்டம்.
ஷோரூம் களில் நிஜமாகவே தள்ளுபடி கொடுக்கி றார்களா? கூட்டத்தோடு கூட்டமாக ஒவ்வொரு ஷோரூமாக ஏறி இறங்கினோம்.
நமக்குத் தெரிந்து தள்ளுபடி விலையில் BS3 பைக்குகளை வாங்கியதாக ஒருவர் கூட நம் கண்களுக்குப் புலப்பட வில்லை. ஸ்டாக் இல்லை; BS4 பைக்தான் இருக்கு...
வேணும்னா புக் பண்ணிக் கலாம்! என்றே ஒவ்வொருவரிடம் இருந்து பதில் வந்தது.
72,000 ரூபாய் விலை கொண்ட ஹோண்டா ஷைன் பைக், 52,000 ரூபாய்க்குக் கிடைக்கும்’ என்று பெட்டிக்கடை அறிவிப்பைப் போல் வந்திருந்த விளம் பரத்தை கட் செய்து வந்திருந்த ஒருவர்,
எது கேட்டாலும் இல்லைங் குறானுங்க... என்று திட்டிக் கொண்டே நகர்ந்தார். ஹீரோ டீலர்ஷிப்பில் வேற மாதிரி. ‘‘CBZ Xtreme வாங்கலாம்னு வந்தேன்;
ஆனா ஸ்கூட்டர் தான் இருக்குங் குறாங்க. அதுவும் பழைய விலைக்கே! விசாரிச்சா, அதுவும் BS3 ஸ்கூட்டர் தான்! என்று விவரம் தெரிந்த ஒருவர் விருட்டெனக் கிளம்பினார்.
உண்மையில், ஸ்கூட்டரைக் குறி வைத்துத் தான் ஷோரூம் நிறுவனங்கள் இந்த அதிரடியில் இறங்கி யிருப்பதாகச் சொல்கிறார்கள். 18,000 டிஸ்கவுன்ட்னு முதல்ல சொன்னாங்க..
கடைசியில அதே ரேட்டுக்குத் தள்ளி விடப் பார்க்குறாங்க! ஒப்புக் கலைன்னா, ‘ஸ்டாக் இல்லை; கிளம்புங்க’ னு விரட்டி விடுறாங்க. பொண்ணு ங்கன்னா, ஒண்ணும் தெரியாதுன்னு நினைச் சுட்டாங்களா?’’ என்றார் ஒரு பெண்.
சென்னையில் உள்ள ஹோண்டா ஷோரூமில், ‘‘BS4 பைக்குகள் மட்டும் தான். BS3 ஸ்டாக் இல்லை’’ என்று அறிவிப்புப் பலகையே வெளியில் வைத்தி ருந்தார்கள்.
நாம் விசாரித்த வரை கோவை, மதுரை, திண்டுக்கல், அருப்புக்கோட்டை, திருச்சி போன்ற ஊர்களில் உள்ள ஷோரூம் களில் சொல்லி வைத்தாற் போல் அனைவரும், ‘‘ஸ்டாக் இல்லைங்க; எல்லாம் வித்துடுச்சு!’’ என்று ஒரே பதிலைச் சொன்னார்கள்.
இன்னும் சிலர் பதில் சொல்லவே கடுப் பானார்கள். கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் சில ஷோரூம்கள், கடையை இழுத்து மூடிவிட்டுக் கிளம்பி யிருந்தன.
அப்புறம் என்ன விளம்பரம் போடுறீங்க? என்று சோஷியல் மீடியாக்களில் கடுப்பாக ஆரம்பித்து விட்டார்கள் இளைஞர்கள்.
இன்னும் சிலர், இல்லுமினாட்டி களின் வேலையாக இருக்கலாம் என்றும் காமெடி கமென்ட் செய்தார்கள்.
சாதாரண மாக ஆயில் பாத்துக்கே செல்ஃபி எடுத்து மார்னிங் மோட்டிவேஷன் பண்ணும் போராளிகள், சல்லிசான விலையில் பைக் வாங்கினால் ஸ்டேட்டஸ் போடாமலா இருப்பார்கள்?
இப்படியும் நடந்திருக்கலாம்?
29-ம் தேதி மாலை தான் சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்பை வெளி யிட்டது. ஒரே நாளில் நிறுவனங் களால், 8 லட்சம் பைக்குகளை விற்றுத் தீர்த்திருக்க முடியுமா?
இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று பைக் நிறுவனங் களுக்கு முன்பே தெரிந்தி ருக்கிறது.
இதனால் BS3 பைக்குகளை கொஞ்சூண்டு சல்லிசான டிஸ்கவுன்ட்டில், சென்ற ஜனவரி மாத ஆரம்பத்தி லிருந்தே விற்பனையை ஆரம்பித்து விட்டார்கள் டீலர்கள்.
அதாவது, டிவிஎஸ் ஜூபிட்டரின் ஆன்ரோடு விலை 62,000 என்றால், 2,000 முதல் 3,000 வரை டிஸ்கவுன்ட் கொடுத்து, சில ஆக்சஸரீஸ்களும் கொடுக்கப் பட்டு விற்பனை எப்போதோ ஜரூராக ஆரம்பிக்கப் பட்டு விட்டது.
இன்னும் சிலர் இன்ஷூரன்ஸையும் இலவச மாகக் கொடுத்து கவர் செய்திரு ந்தார்கள். ‘கூடவே ஹெல்மெட்டும் இலவசம்’ என்றன யமஹா, டிவிஎஸ், பியாஜியோ போன்ற ஷோரூம்கள்.
அப்படி யென்றால்... தீர்ப்பு வருவதற்கு முன்பே முக்கால்வாசி வாகனங் களை குறைந்த தள்ளுபடிக்கு விற்றுத் தீர்த்து விட்டார்கள். மீதமுள்ள கொஞ்சூண்டு வாகனங் களுக்குத் தான் மக்களிடையே இந்த அடிபிடி!
நம்ம அதிர்ஷ்டத் துக்கு 'பாகுபலி' டிக்கெட்டே கிடைக்காது; சல்லிசு விலையில் பைக், ஸ்கூட்ட ரெல்லாம் எப்படி பாஸ் கிடைக்கும்?
ஆப்பிரிக்கா, ஜெர்மனி, இலங்கை, கனடா போன்ற நாடுகளில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு என்று சட்ட திட்டம் எதுவும் இல்லை.
இதனால், நினைத் திருந்தால் நிறுவனங்கள் தங்கள் BS3 வாகனங்கள் அனைத் தையும் ஏற்றுமதி செய்தால்... எல்லா பிரச்னை க்கும் தீர்வு கிடைத் திருக்கும்!
கார் நிறுவனங் களுக்கு ஓகே.. பைக் கம்பெனிகள் இதற்குப் பெரும்தொகை செலவழிக்க வேண்டி வரும்.
பைக் நிறுவனங்கள் இதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை. வடிவேலு சொல்வது போல், எல்லாத்தை யும் ப்ளான் பண்ணியே பண்ணி யிருக்கின்றன நிறுவனங்கள்! Vikatan.