சாக்லேட்டில் டார்க் சாக்லேட் தான் மிகவும் நல்லது. இந்த டார்க் சாக்லேட் உடல் எடையையும் குறைக்க உதவும் என்பது தெரியுமா?
கொக்கோ பவுடர்/சாக்லேட் ஃப்ளேவர் புரோட்டீன் பவுடர்
கொக்கோ பவுடரில் சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய்களை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரி யண்ட்டுகள் உள்ளன. கொக்கோ பவுடர் சற்று கசப்பாக இருக்கும்.
ஆனால் சாக்லேட் தயாரிக்கும் போது, அந்த பைட்டோ நியூட்ரி யண்ட்டுகள் அழிக்கப்படுகிறது.
ஆகவே இதன் முழு நன்மையையும் பெற, கொக்கோ பவுடரைக் கொண்டு வீட்டிலேயே ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் தயாரித்துக் குடியுங்கள்.
ஆகவே இதன் முழு நன்மையையும் பெற, கொக்கோ பவுடரைக் கொண்டு வீட்டிலேயே ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் தயாரித்துக் குடியுங்கள்.
பசலைக் கீரை
இந்த ஸ்மூத்தியில் சேர்க்கப்படும் பசலைக் கீரையின் சுவையே தெரியாது. இது இந்த ஸ்மூத்திக்கு ஒரு அடர்த்தியைக் கொடுக்கும். மேலும் இந்த கீரையில் இரும்புச் சத்து ஏராளமான அளவில் உள்ளது.
இது உடலில் நல்ல மன நிலைக்குத் தேவையான செரடோனின் ஹார்மோனின் அளவை அதிகரிக்கும்.
ஆளி விதை
ஆளி விதையும் செரடோனின் உற்பத்தியை ஊக்கு விக்கும். மேலும் இதில் இதய ஆரோக்கி யத்திற்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.
சில ஆய்வுகளில் ஆளி விதை புற்றுநோய் செல்களை அழிப்ப தாகவும் தெரிய வந்துள்ளது. ஆளி விதையில் கரையக்கூடிய நார்ச் சத்துக்கள் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவு உயராமல் குறைக்கும்.
சில்லியம் உமி பவுடர் (Psyllium Husk Powder)
இந்த பவுடர் செரிமான மண்டலத்தின் செயல் பாட்டை சீராக வைத்துக் கொள்ளும். இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் பார்த்துக் கொள்ளும்.