ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கோவை வெள்ளியங்கிரி மலையில் கட்டடங் களை கட்டியது தொடர்பான வழக்கில் பதில் அளிக்க ஐகோர்ட் ஈஷா யோக மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி. முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்ற த்தில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப் பாட்டில் உள்ளது.
ஆனால், இக்கிராம த்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர சிவன் சிலையும், அதைச் சுற்றி சுமார் ஒரு லட்சம் சதுர அடியில்
தியான மண்டபங்கள், கார் பார்க்கிங், பூங்கா போன்ற கட்டு மானங்கள் சட்டத்துக்கு புறம்பாக மலைப் பகுதியில் கட்டப் பட்டுள்ளன.
மேலும், விதிகளை மீறி மலைப் பகுதியைச் சுற்றிலும் ஆக்கிரமித்து விதி முறைகளை மீறி கட்டு மானங்கள் கட்டப் பட்டுள்ளன.
இதனால், விதிகளை மீறி கட்டப் பட்டுள்ள இந்தக் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இதனிடையே கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் விதிகளை மீறி 109 ஏக்கரில் கட்டிடங் களை கட்டியுள்ள தாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
ஆதியோகி சிவன் அமைத்தற் கான ஆவணங் களை கேட்டுள்ள தாகவும் தமிழக அரசு தெரிவித் துள்ளது.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை க்கு வந்தது. அப்போது, விதி முறை மீறி கட்டப் பட்ட கட்டிடங்கள் தொடர்பாக பதில் அளிக்க ஈஷா யோகா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.