திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகருமான தனுஷ் தங்கள் பள்ளியில் கஸ்தூரி ராஜாவின் மகனாகவே படித்தார் என்று கே.கே.நகர் தாய் சத்யா மெட்ரிக் பள்ளியின் முதல்வரும்,
எம்ஜிஆரின் உறவினருமான சுதா விஜயகுமார் ஆதாரங்களை வெளியிட்டார். தமிழ், ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர் யாவை திருமணம் செய்து கொண் டுள்ளார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்த போது கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனுடன் நெருங்கிப் பழகிய தாகவும் தம்பதிக் குள்ளே விரிசல் ஏற்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நடிகை அமலா பாலை தன் கட்டுப்பாட்டில் தனுஷ் வைத்துக் கொண்டு ள்ளதாகவும், ஏ.எல்.விஜய்- அமலா பால் தம்பதி விவாகரத்துக்கு தனுஷ் தான் முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடிகர் தனுஷ் பீட்டா அமைப்பில் உறுப்பினர் என்று குற்றச் சாட்டு எழுந்தது.
நடிகை களுடன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிய தனுஷ் தற்போது அதிலிருந்து தாற் காலிகமாக விடுபட்டு அவரது தாய் , தந்தை யார் என்பது குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.
சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளார் கதிரேசன். அவரது மனைவி மீனாட்சி.
கடந்த 2002-ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்று விட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்ப தாகவும் தெரிவித்தனர்.
தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷுக்கு உத்தர விடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தனுஷின் அங்க அடையாள ங்களை சரி பார்க்கும் பணிகள் நீதித்துறை பதிவாளரின் முன்னிலையில் நடைபெற்றது.
தனுஷ் தங்கள் மகன் கலையரசன் தான் என்பதற்கான ஆதாரங்களை மேலூர் தம்பதியினரும், தங்கள் மகன் வெங்கடேஷ் பிரபு தான்
இந்த தனுஷ் என்று கஸ்தூரி ராஜா தரப்பிலும் நீதிமன்ற த்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இந்த வழக்கு வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
ஆனால் நடிகர் தனுஷ், கஸ்தூரி ராஜா- விஜயலட்சுமி தம்பதியின் மகனாக வெங்கடேஷ் பிரபு என்ற பெயரில் தங்கள் பள்ளியில் படித்ததாக சென்னை கே.கே.நகர் தாய் சத்யா மெட்ரிக் பள்ளி முதல்வரும்,
எம்ஜிஆரின் உறவின ருமான சுதா விஜயகுமார், தனுஷின் மாற்றுச் சான்றிதழ்களை ஆதாரமாக வெளியிட் டுள்ளார்.
இது குறித்து டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி நிறுவனத் துக்கு அவர் அளித்த பேட்டியில், நடிகர் தனுஷ் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை எங்கள் பள்ளியில் வெங்கடேஷ் பிரபு என்ற பெயரில் படித்தார்.
எங்கள் பதிவேடுகளின் படி கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை படித்த அவரது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜா ஆவார்.
தனுஷ் மட்டு மல்லாமல் அவரது இரு சகோத சகோதரிகளும் எங்கள் பள்ளியில் தான் படித்தனர். அவர்கள் மூவரையும் பள்ளிக்கு அழைத்து வருவதும், அழைத்துச் செல்வதும் தாய் விஜயலட்சுமி தான்.
பள்ளி ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகளில் நேரம் கிடைத்த போது கஸ்தூரி ராஜா கலந்து கொண்டார்.
இது குறித்து தனுஷுடன் படித்த மாணவர்கள், பாடம் எடுத்த ஆசிரியர்கள் சாட்சிக்கு அழைத்தால் ஆஜர்படுத்த தயார் என்றார் அவர்.
ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து சான்றி தழ்களும் போலி யானவை என்று மனுதாரரான மேலூர் தம்பதியின் வழக்கறிஞர் டைடஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், அந்த பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள வெங்கேஷ் பிரபு, தனுஷ் அல்ல.
தனுஷின் சான்றிதழ் என்று சமர்ப் பிக்கப்பட்டுள்ள அந்த சான்றிதழில் அவரது தந்தையின் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்று தான் உள்ளதே தவிர கஸ்தூரி ராஜா என்றில்லை.
வெங்கடேஷ் பிரபு என்ற பெயர் கொண்ட ஒரு சான்றிதழை நகல் எடுத்துக் கொண்டு, அதில் சில மாற்றங்களை செய்து நீதிமன் றத்தில் சமர்ப்பித் துள்ளனர்.
மேலும் அவர்கள் சமர்ப்பித்த சான்றி தழின்படி அதில் குறிப்பிட்ட ஜாதியும், கஸ்தூரி ராஜாவின் ஜாதியும் வெவ்வே றானவை.
எனவே தனுஷ், கஸ்தூரி ராஜாவின் மகன் என நிரூபிப் பதற்காக தயாரிக்கப் பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அனைத்து சான்றிதழ்களும் போலி யானவை என்று வெட்ட வெளிச்ச மாகியுள்ளது.