விஜயகாந்துக்கு டி.டிவி. தினகரன் அழைப்பு !

0 minute read
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் போட்டி யிடுகிறார்.

விஜயகாந்துக்கு டி.டிவி. தினகரன் அழைப்பு !

பரபரப்பாக எதிர் பாக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் தினகரன் போட்டி யிடுகிறார் என இன்று காலை அறிவிப்பு வெளியானது.

இதை யடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தினகரன், ஆட்சி மன்ற குழுவின் விருப்பப்படி நான் ஆர்.கே.நகர் தொகுதில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் திமுகவை மட்டுமே நாங்கள் எதிர் அணியாக கருதுகிறோம். 

கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மறைந்த முதல்வர் ஜெ.வின் நலத்திட்டங்கள் அங்கு நிறை வேற்றப்படும். வருகிற 23ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்வேன் என அவர் தெரிவித்தார்.

மேலும் தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்டுகள், மதிமுக மற்றும் பாஜக கட்சிகள் என்னை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும். எங்களது ஒரே எதிரி திமுக தான் என்றார்.
Tags:
Today | 21, March 2025
Privacy and cookie settings