கடலில் சிக்கியவர்களை ரிமோட் மூலம் தானாகவே காப்பாற்றும் எமிலி !

பொங்கலுக்கு வீட்டை ஒழுங்குப் படுத்தினால் இண்டு இடுக்கில் எல்லாம் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கிய மானது ரிமோட் கார்கள். 

கடலில் சிக்கியவர்களை ரிமோட் மூலம் தானாகவே காப்பாற்றும் எமிலி !
விதவித மான கலர்களில் ஏகப்பட்ட கார்கள் கிடைக்கும். வீடு முழுவதும் பொருட்களா, அல்லது நம்மிடம் இருக்கும் பொருட்களை வைக்கும் அளவுக்கே நம் வீடா எனத் தெரியாது. 

அந்த நெரிசலிலும் சாதூர்ய மாக ரிமோட் கார் ஓட்டியி ருக்கிறோம். எப்போதாவது அந்த தொழில் நுட்பத்தை ஒரு முக்கியமான பிரச்னைக்கு தீர்வாக மாற்றலாம் என யோசித்திரு க்கிறோமா? 

எவ்வளவு சிறப்பான டெக்னாலஜி அது? அதை ஒருவர் யோசித்தி ருக்கிறார். விளைவு... பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

ரிமோட் எமிலி

EMILY -இதுதான் அதன் பெயர். யு.எஸ் கப்பல் படையின் தயாரிப்பான இந்த எமிலி, ஒரு ரோபாட்டிக் லைஃப்கார்டு. முழுமை யாக 15 ஆண்டுகள் ஆராய்ச்சி க்கு பின்னரே எமிலி தயாரானது. 

பலரது கூட்டு முயற்சியான எமிலி, சென்ற ஆண்டு கடலில் சிக்கிய சிரியா அகதிகள் 300க்கு மேற்பட்ட வர்களை காப்பாற்றியது.

எப்படி செயல்படுகிறது?
EMILY கிட்டத் தட்ட ஒரு நீச்சல் வீரனைப் போன்றது தான். அதைக் கடலில் தூக்கிப் போட்டு விட்டால் நீச்சல் அடிக்கும். ரிமோட் மூலம் அதன் வேகத்தையும், திசையையும் கட்டுப் படுத்தலாம். 

உதவி வேண்டுபவர் இருக்கும் திசை நோக்கி எமிலியை அனுப்பினால், அவர் அதை பிடித்துக் கொண்டால் போதும். கப்பல் இருக்கும் திசைக்கு அவரை பத்திரமாக கொண்டு சேர்த்து விடும். 

ஒரு மனிதன் போகும் நேரத்தை விட வெகு சீக்கிரமாக போக வேண்டிய இடத்துக்கு எமிலியால் போக முடியும் என்பதும், நீச்சல் தெரியாத வர்களை சுமந்து கொண்டு வேகமாக நீந்தும் என்பதும் இதன் பலன்கள்.

பளிச் என கண்ணுக்குத் தெரியும் ஆரஞ்சு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் எமிலி நான்கு அடி நீளமும், 25 பவுண்டு (11 கிலோ) எடையும் கொண்டது. 

ஜெட்ஸ்கீ என்னும் நீர்ச் சறுக்கு இயந்திரத்  தின் உள்ளே இருக்கும் டர்பைன்கள் தான் எமிலிக்கு உள்ளேயும் இருக்கின்றன. 

அவை, பேட்டரி மூலம் இயக்கப் படுகின்றன. மணிக்கு 22 மைல்கள் வேகத்தில் எமிலி சீறும்.

இதனுடன் இரண்டு வழிகளில் தொடர்பு கொள்ள முடியும். ஒன்று, ரேடியோ அலைகள் உதவியுடன் ரிமோட் மூலம் அதை கட்டுப் படுத்தலாம். 
இன்னொன்று எமிலியில் இருக்கும் கேமரா மூலம் அதன் பாதையை அறியலாம். 

ஸ்மார்ட்போனில் தெரியும் லைவ் வீடியோ மூலமும் எமிலியை திசை மாற்றலாம். இரவு நேரங்களில், வெளிச்சம் குறைவான சமயங்களில் இந்த கேமரா உதவியாக இருக்கும்.

ஹெலிகாப்டரில் இருந்தோ, கப்பலில் இருந்தோ, பாலத்தின் மேல் இருந்தோ எமிலியை நீரில் வீசி விட்டு, பின் ரிமோட் மூலம் அதை தேவையான பகுதிக்கு அனுப்பலாம். 

போர் விமானங்கள் செய்யப்படும் கடினமான பொருட்களால் ஆனது எமிலி. 

எனவே அதை உடைப்பதோ, சேதாரம் செய்வதோ கிட்டத்தட்ட இயலாத காரியம். ஒரு எமிலியை பிடித்துக் கொண்டு 8 பேர் வரை நீந்திச் செல்ல முடியும். 

தென் கொரியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் எமிலியை பயன் படுத்துகின்றன.
தொழில்நுட்பம் ஒன்று தான். அதை எப்படி, எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அந்த தொழில் நுட்பத்தின் வெற்றி இருக்கிறது. 
எந்த தொழில்நுட்பம் என்றாலும் அது மானுடத்தின் வாழ்வை சிறப்பாக்கு வதும், இந்த பூமியை அழிக்காமல் இருப்பதும் அவசியம்.
Tags:
Privacy and cookie settings